பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 159

புழுதி கீழ்மேலாகப் புரண்டிருக்கும் செம்மண்நிலத்தின் ஈரத்திலே, ஊனைக் கிழித்தாற்போன்ற சிவப்பான மேட்டு நிலத்தைப் பிளந்து சென்ற, நெடிய உழவுசாலிடத்து, விதைத்த இடங்களிலே, விதைகள் பலவும் முளைத்து வளர்ந்தன. நல்ல கலைமானின் கூட்டமானது பரவி நிற்பதுபோலக் கொம்புடைய தலைக்குடைகளைச் சூடிய உழவர்கள், ஒலிக்கும் பறையின் ஒலி முறையோடு, பூமியிலே இறங்கும்படி களைக்கொட்டுக்களை இழுத்து வாங்கிக் களைவெட்டித் தூய்மைசெய்த பெரிய புனத்திலே, வரகுகளும் விளைந்தன. கவைத்த வரகுக்கதிர்களின் கரிய புறத்தினைப் பற்றிக், குடுமிபொருந்திய தலையையுடைய நீண்ட பெரிய தோகையினவான மயில்கள் உண்ணும், உண்ட அவை, தம் அழகிய தோகையை விரித்து, இன்பமுறக் கொல்லை யிலே வேலை செய்யும் உழவர்கள் கூழ் உண்ணுவதற்கு நிழலுக்காக விட்டுவைத்திருக்கின்ற, வன்மையான இலையினை யுடைய குருந்தமரத்தின் வளைந்த கிளையிலேயிருந்து கொண்டு, கிளிகளை ஒட்டும் குறமகளிரின் ஒலி போலத் தம் துணையை விளித்தும் அகவிக்கொண்டிருக்கும். அந்தக் கார்காலம் என்பதும் இதுதானோ? -

என்று, பருவங் கண்டு ஆற்றாமை மீதுரத் தலைமகள் தோழிபாற் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. பேருறை - பெரும் பெயல். தலைஇய பெய்யத் தொடங்கிய, 4. சுவல் - செம்மண் நிலம். 5. நாறி முளைத்து. 7. கோடுடைத் தலைக்குடை - பனையோலையால் முடையப்பட்ட கொம்புடைய குடை 3. பறைச்சீரின் இறங்க வாங்கி - பறையின் தாளச் சீருக்கு ஒத்தாற்போல களைக் கொட்டால் கொத்தி இழுத்து. 9. களைகால் கழிஇய களையை வேரோடும் களைந்த.10.கவைக் கதிர்-சுவையுடையகதிர்.1.குடுமி -கொண்டை12.காமர் கலவம்-அழகியதோகை.14.வாங்கு சினை - வளந்த கிளை. 17. கொடுஞ்சி - தேர்மொட்டு, தேர்க்கலசம் எனவும் சொல்வர். 18. உளை - பிடரிமயிர். 19. தெளித்த தெளிவித்த,

விளக்கம்: த்ன் தலைவன் பிரிந்தபின், உழவர் செய்த தொழில் நிகழ்வுகளின் முற்றுப்பெற்ற தன்மையைக் கூறி, குறித்த கார்ப்பருவம் வந்தும், தெளிவித்த அவர், தம் வினையை முடித்தவராக வரவில்லையே என ஏங்குகிறாள் தலைவி.

பாடபேதங்கள்: 9. கணைக்கால் கழிஇய.13. கரடுழவு ஒழிந்த 14. பல்லிலைக் குருந்தின் 16. கார்மன் இகுளை தோழி.