பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
162
அகநானூறு - மணிமிடை பவளம்
 


விளக்கம்: முதலிலே வீட்டை மணமனையாகப் புனைந்து, தன் மகளையும் அவள் காதலனையும எதிர்பார்த்திருக்கும் பித்துக் கொண்டவள் செவிலித்தாய் ஆவள்; பெற்ற தாயோ, இரவுத் துயிலற்று, வடியும் கண்ணிர் மாறாதவளாக, இப்படிக் குறி கேட்கிறாள். உடன் போக்கிலே சென்றாலும், இடை வழியிலே, தாயின் அன்பை நினைந்து மகள் திரும்பி வந்து விடுவாள் என்ற சபலம், அவளுக்கு இருக்கிறது.

மேற்கோள்: இது, தெய்வத்தொடு படுத்துப் புலம்பியது. எனத் ‘தன்னும் அவனும் அவளும் சுட்டி என்னும் சூத்திர உரையினும்; ‘போக்குடன் அறிந்தபின் தோழியோடு கெழீஇக் கற்பின் அக்கத்து நிற்றற்கண்ணும் என்னும் துறைக்கு,"எம்மனை முந்துறத் தருமோ, தன் மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே’ என்ற பகுதியை உதாரணமாகக், களவலராயினும் காம மெய்ப்படும்’ என்னும் சூத்திர உரையினும், இச்செய்யுள் கொடுப்போரின்றிக் கரணம் நிகழ்ந்தது என்க. ‘கொடுப்போ ரின்றியும் கரணம் உண்டே என்னும் சூத்திர உரையினும் காட்டிக் கூறுவர் நச்சினார்க்கினியர். எம்மனை. யாதவன் குறிப்பே’ என்பது ‘மறைவெளிப்பாடு என, ‘மறைவெளிப் படுதலும் என்னும் சூத்திர உரையிற் காட்டுவர் பேராசிரியர்.

பாடபேதங்கள்: 10. நலம்புனை உதவியோ உடையன், 1. அஃதறி கற்பின் நன்று.

196. பக்கத்து வாராதே!

பாடியவர்: பரணர். திணை: மருதம். துறை: பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகற்குக் கிழத்தி சொல்லியது. சிறப்பு: தன் தகப்பனின் கண்ணழகைக் கெடுத்த கோசர்களைத் தித்தனின் துணைகொண்டு கொன்று பழிதீர்த்துக் கொண்ட அன்னி மிஞியின் செய்தி.

(தன் தலைவியை மறந்து, சிலகாலம் பரத்தை ஒருத்தியுடன் உறவுகொண்டிருந்த தலைவன் ஒருவன், அங்குக் கொண்ட ஊடலாலோ, அன்றி எழுந்த ஊரலரின் மிகுதியாலோ, அவளைப் பிரிந்து வீட்டிற்கு வருகின்றான். அப்போது, தலைவி இப்படி மறுத்துக் கூறுகின்றாள்.)

        நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து,
        நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல்
        துடிக்கண் கொழுங்குறை நொடுத்து, உண்டுஆடி,
        வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
        ஆம்பல் அகலிலை, அமலைவெஞ் சோறு 5