பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


164 - - அகநானூறு - மணிமிடை பவளம்

- திரளை வெஞ்சோறு - சூடான சோறு; விருப்பான சோறும் ஆம். 6. தீம்புளிப் பிரம்பின் திரள்கனி - புளிப்பும் இனிப்பும் உடையதான பிரம்பின் திரண்ட பழம்; இதனையிட்டுப் புளிக்கறி செய்திருக்கின்றனர் அந்தநாளைய மகளிர். 8. குறுக - அணுக. 9. அழித்ததன் தப்பல் - அழித்ததான தவறுதல். தெறுவர அச்சம் கொள்ளுமாறு. 1. அழுந்தை அழுந்துார்; தேரழுந்துார் என்னும் ஊராக இருக்கலாம். 12. இயல் - இங்கு அவளுடைய பழிதீர்த்த செம்மாந்த நிமிர்ந்த நடையைக் கூறினர். 13. தகுவி - தகுதியுடையவள். -

உள்ளுறை: வராலின் கொழுங்குறை விற்றுக் கள்ளுண்டு ஆடி அயர்ந்துகிடந்து இரவெல்லாம் உறங்கிய தலைவனுக்குக், காலையிலே வெஞ்சோறு அளிக்கும்.பாண்மகளைக் கூறினாள், அதுபோல, இரவெல்லாம் பரத்தையர் சேரியே துணையாகத் திரிந்த அவன், வைகறை வேளையிலே தன் மனைவியின் நலம் விரும்பி வந்ததனை எள்ளுதற் பொருட்டாக, அவரைப் போன்றே, அவன் பரத்தைமை மயக்கிலே அறிவிழந்தாலும், தான் தன் கற்பிலே சிறந்தவள் என்பதையும் கூறினாள். பரத்தையின் இளமைச் செருக்கைக் கூறுவாள், ‘கோசரைக் கொன்று முரண்போக்கிய அன்னி மிஞரிலியின் செம்மாந்த நடைபோலும் என்றாள். அவள் தன்னை வென்று அவனை வெற்றி கொண்டதையும் இதனால் கூறி வருந்தினாள்.

விளக்கம்: பெரிதான வரால் படவும், அதனை விற்றுத் தாம் களித்துத் திரிதலிலேயே மனஞ்செலுத்தி, வேட்டமும் மறந்து துயிலும் கடமை மறந்தவர் செயலைக் கூறினாள், தலைவனும் செல்வச்செருக்கினால் தன் இன்பமே கருதி இல்லறக் கடமைகளையும் மறந்து, பரத்தை மயக்கிலே அலைவதனைக் காட்டுப் பொருSடாக அவள் தழுவிய நின் மார்பை யான் தழுவேன்; அருகே வரவேண்டாம் என்றது, அவளுடைய ஊடலை உணர்த்தும். அத்துடன் அவளுடைய பிரிவின் வேதனையையும் காட்டும். அவன் தழுவலை அவள் விரும்புவதையும் அவளுடைய கற்பையும் குறிப்பால் உணர்த்தும்.

பாடபேதங்கள்: 7. இடுமூதுர 9, அழித்தன்றவற்றெறுவற1. நறந்தை. -

197. எதற்கும் வருந்தாதே! பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. சிறப்பு: கண்ணன் எழினி என்பவனின் போராற்றலின் சிறப்பும், அவனுக்கு உரியதான முதுகுன்றம் என்னும் நாட்டுப் பகுதியின் வளமும்பற்றிய செய்திகள். r