பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


αρωφώ உரையும் புலியூர்க்கேசிகன் 167

சிறுமகன் ஏறி இறங்கி விளையாடுவது போல்வதாயிருக்கும் என்பதையும் கூறினாள். தலைவியும் மகனைப் பெற்றவளான தன்மையையும் தன் மகனைக் காணும் ஆர்வமிகுதியுடையவன் தலைவன் என்பதையும் உண்ர்த்துவதற்காக,

198. சூர்மகள் அவள்!

பாடியவர்: பரணர். திணை : குறிஞ்சி. துறை: புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(இரவுக் குறியிலே, நள்ளிருள் வேளையிலே வந்து தன்னுடன் கூடிக் கலந்து மகிழ்ந்த தலைவியின் நினைவு, அவள் வீடு திரும்பிய பின்னரும், அந்தத் தலைவனின் உள்ளத்திலே நின்றும் நீங்கவில்லை. அவளுடைய அந்த அருளை நினைந்து நினைந்து பெருமிதங்கொள்ளும் அவனுடைய நெஞ்சத்தின் விளக்கமே இப் பாடல்)

‘கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?’ எனக் கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது, நயந்துநாம் விட்ட நல்மொழி நம்பி, அரைநாள் யாமத்து விழுமழை கரந்து, கார்விரை கமழும் கூந்தல், தூவினை 5 நுண்நூல் ஆகம் பொருந்தினன், வெற்பின் இளமழை சூழ்ந்த மடமயில் போல, வண்டுவழிப் படரத், தண்மலர் மேய்ந்து, வில்வகுப் புற்ற நல்வாங்கு குடைச்சூல் அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, 10 துஞ்சுஊர் யாமத்து மயங்கினள், பெயர்வோள், ஆன்ற கற்பின் சான்ற பெரியள், அம்மா அரிவையோ அல்லள்; தெனாஅது ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பிற். கவிரம் பெயரிய உருகெழு கவாஅன், 15 ஏர்மலர் நிறைசுனை உறையும் சூர்மகள் மாதோ என்னும்-என் நெஞ்சே!

என்னுடைய நெஞ்சமே! நம்முள்ளே ஒளித்துக் கொண்டிருக்கும் காமத்தினைப்பற்றிச் சொல்லுவோமோ, சொல்லாதிருப்போமோ என முதலில் எண்ணினேன். முடிவிலே, அதனை அடக்கவியலாது அவளை அடைய விரும்பி நாம் விடுத்த நன்மொழியாகிய தூதினையும் அவள் நம்பினாள். பாதி