பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


174 அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 2. புலால் அஞ்சேரி - புலால் நாற்ற முடையசேரி.3 நீருடுத்து-நீராற் சூழப்பெற்று.7. வளை - சங்கு.9. சிறை - பக்கம்.10. எல்லை - பகல் 13 பெட்குவம் - பேணுவோம்.

விளக்கம்: சேரி சிறியதாயினும், பற்பல இன்னாமைகளை உடைய உறையுள்களை உடையதாயினும், அவள் இருப்பதனால் அது நினக்கு இன்பமாகவே விளங்கும் என்றனள். ஒரு நாள் தங்கியவர்க்குத் தம் ஊரையும் மறக்கச் செய்யும் இன்பம் தரும் பண்புடையது எம் ஊர் என்றாள், பகற் கூட்டமோ, இரவுக் கூட்டமோ, எது நுமக்கு இசைந்தது என்பாள். இரண்டையும் கூறி, நும் ஒப்பதுவோ எமக்கு உரைத்திசின் என்றாள்.

201. சோழநாடும் தலைவியும்!

பாடியவர்: மாமூலனார். திணை : பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளுக்குத் தோழி சொல்லியது. சிறப்பு:உவாநாளிலே பாண்டிநாட்டுக் கடற்கரைப் பகுதியினர், கடல் தெய்வத்திற்கு வழிபாடு செய்தல்.

(தலைமகன், தலைமகளைப் பிரிந்து வேற்று நாடு சென்றிருந்தான். குறித்துச் சென்ற காலம் வந்தும் அவன் வரவில்லை. பிரிவுத் துயரினைத் தாளாதவளாக வாடி நலிந்து தலைமகளுக்குத் தோழி இப்படிக் கூறி அவள் துயரை மாற்ற முயலுகின்றாள்.)

அம்ம, வாழி-தோழி-பொன்னின்

அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை

வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்

புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை

அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து. 5

தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித்துறைப் பரவ, பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை, உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு, அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் 10 பொருந்தாக் கண்ணன், வெய்ய உயிர்க்கும் என்று எவன் கையற்றனை, இகுளை? சோழர் வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும், ஆண்டு அமைந்து உறைகுநர் அல்லர் - முனாஅது வான்புகு தலைய குன்றத்துக் கவாஅன், ‘ 15