பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 அகநானூறு - மணிமிடை பவளம்

வருவதற்குச் சற்று நேரம் ஆகவே தலைவி வருந்தினாள். அப்போது, அவன் வந்து மறைந்திருக்கவே, அவன் கேட்குமாறு, இரவு வருவதன் தடைகளை எல்லாம் தோழிக்குச் சொல்லுகிறாள் தலைவி, அல்லது, தோழி அவன் வந்தான்’ என்று சொல்லத் தொடங்கத் தலைவி தோழிக்குக் கூறுகிறாள்.)

இரும்பிழி மகாஅரிவ் அழுங்கல் மூதூர்

விழவின் றாயினும் துஞ்சா தாகும்: மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின், வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள் பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின். 5

துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர் இலங்குவேல் இளையர் துஞ்சின், வை.எயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்; அரவவாய் ஞமலி மகிழாது மடியின், பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின் 10

அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே; திங்கள் கல்சேர்வு கனைஇருள் மடியின், இல்எலி வல்சி வல்வாய்க் கூகை கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்; வளைக்கண் சேவல் வாளாது மடியின், 15

மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்; எல்லாம் மடிந்த காலை, ஒருநாள் நில்லா நெஞ்சத்து அவர்வா ரலரே; அதனால் அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து, ஆதி போகிய பாய்பரி நன்மா - 20 ‘நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல்முதிர் புறங்காட் டன்ன பல்முட் டின்றால்-தோழி! நம் களவே. மிக்க தேனுண்டு களிக்கும் மாக்களையுடைமையால் ஆரவாரமிக்க இம் மூதூர்தான், விழாவினை உடையதின் றாயினும் துஞ்சாதாகும்; வளமிக்க கடைவீதியும் பிற வீதிகளும் உறங்கி னாலும் கொடிய பேச்சுடைய அன்னை உறங்காளாவள். பிணித்துக்கொள்ளும் கூற்றினைப்போலத் தப்பவரிய சிறை காவலையுடைய அன்னை துஞ்சினாலும், உறங்காளாவள். பிணித்துக்கொள்ளும் கூற்றினைப்போலத் தப்பவரிய சிறை காவலையுடைய அன்னை துஞ்சினாலும், உறங்காத கண்ணரான ஊர்க்காவலர் விரைந்து வருவர். விளங்குகின்ற வேலையுடைய