பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


176 - அகநானூறு - மணிமிடை பவளம்

17. குவவு மயிர்-அடர்ந்திருக்கும் மயிர்18, தோல் முலை-திறங்கிய முலை. பிணவு கரடியின் பெண்.

உள்ளுறை: பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை இருள் துணிந்தன்ன குவவுமயிர்க் குருளை தோன்முலைப் பிணவொடு திணைக்கும் வேனில் என்றது, அவ்வாறே தலைவனும் நின்னைத் தழுவி மகிழ்விப்பான் என்பதாம்.

விளக்கம் : கரடியின் குடும்பபாசம் இவரையும் நின்பாற் பாசமுடையவராக விரைந்து திரும்பத் தூண்டிவிடும் என்றனள். உவாநாள் - பெளர்ணமி நாள்; அந்நாளிலே கடல் பொங்கும் என்பது மரபு.

202. தேராது வருவாய் நீ!

பாடியவர்: ஆவூர்கிழார் மகனார் கண்ணனார். ஆவூர்கிழார் மள்ளனானார் என்பதும் பாடம். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனுக்குத் தோழி சொல்லி வரைவுகடாயது.

(தலைவன், இரவுக்குறியிலே வந்து தலைவியைக் கூடி இன்புறும் களவு உறவினையே மேற்கொண்டு வருகின்றான். அவன் மனம், தலைவியை மணந்து கொள்வதிலே ஈடுபடல் வேண்டும் என்று கருதும் தோழி, அவனிடம் இப்படி உரைக்கின்றாள்.) . - -

வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன், கயந்தலை மடப்பிடி இனன் ஏமார்ப்பப், புலிப்பகை வென்ற புண்கூர் யானை கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின். நல்இணர் வேங்கை நறுவி கொல்லன் 5

குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கி, சிறுபல் மின்மினி போலப், பலஉடன் மணிநிற இரும்புதல் தாவும் நாட! யாமே அன்றியும் உளர்கொல்-பானாள், உத்தி அரவின் பைத்தலை துமிய 1 O

உரஉரும் உட்குவரு நனந்தலைத், தவிர்வுஇல் உள்ளமொடு எஃகு துனையாகக், கனைஇருள் பரந்த கல்லதர்ச் சிறுநெறி தேராது உரூஉம் நின்வயின் ஆர்அஞர் அரும்படர் நீந்து வோரே? 15