பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178 அகநானூறு - மணிமிடை பவளம்

உள்ளுறை: புலிப்பகை வென்ற களிறு உயிர்ப்ப, வேங்கையின் நறுமலர்கள் மினிமினி போலக் கரும்புதரிலே தாவும் என்றது. அவன் தனக்கு எதிரான துன்பங்கள் அனைத்தையும் கடந்து வந்து களவிற்கூடி இன்புறுதலால், ஊரலர் பெரிதாக எழுந்து பரவுகின்றது என உணர்த்துவதாம்.

விளக்கம்: யாமே அன்றியும் உளர்கொல்’ என்றதனால், நினக்காக வருந்தும் எம்மை, நீளவும் வருந்தி வாடுதலே துணையாக விட்டுவிடாது, மணந்து, எம் கவலையைத் தீர்ப்பாயாக’ எனக் கூறி வரைவுகடாயினாளும் ஆயிற்று. நீ அது பற்றிக் கருதலை, களவிலேயே மனஞ்செலுத்துவாய் ஆயினை எனக் கூறியதுமாம்.

203. நொச்சிமனைப் பெண்டு

பாடியவர்: கபிலர். திணை: பாலை துறை: மகட்போக்கிய செவிலி சொல்லியது; மகட்போக்கிய தாய் சொல்லியது எனவும் பாடம்.

(மகள் தன் காதலுனுடன் உடன்போக்கிலே சென்று விட, அதனால் வாடியிருக்கும் தாய், இப்படி எல்லாம் நினைக்கின்றாள். முன் ஊரவர் கூறிய அலரும், அதனை அவளிடம் கேட்டால் அவள் நாணுவள் எனத் தான் கேளாதிருந்தமையும், அவள் நினைவுத் திரையிலே தோன்றுகின்றன. வழியிடையே செல்லும் அவர்களுக்கு விருந்துவைத்து இன்புறுத்த, யானும் அவ்விடத்திலே அவர்கட்கு முற்படச் சென்று இருப்பேனாக’ என்று கருதுகிறாள் அவள்.)

‘உவக்குநள் ஆயினும்,உடலுநள் ஆயினும், யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர், ‘இன்னள் இனையள், நின்மகள் என்ப பல்நாள் எனக்கு வந்து உரைப்பவும், தனக்குஉரைப்பு அறியேன். 5

“நாணுவள் இவள் என, நனிகரந்து உறையும் யான்இவ் வறுமனை ஒழிய, தானே, ‘அன்னை அறியின், இவனுறை வாழ்க்கை எனக்கு எளிது ஆகல் இல் எனக், கழற்கால் மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப், 10 பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான் அன்னேன் அன்மை நன்வா யாக, மான்.அதர் மயங்கிய மலைமுதல் சிறுநெறி