பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


180 அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 1. உடலுநள் வரந்துபவள். 2. தீவாய் - கொடுமை கூறும் வாய். 7. வறுமனை - செல்வமகள் இல்லாததால் வறுமனையாயிற்று. 13. நன் வாயாக உண்மை தோன்ற 14. மான் - விலங்கு.16. செல்விரந்து - வழிப்போக்கரான புதியவர்க்கு அளிக்கும் விருந்து.

விளக்கம்: தன் மகள் நாணுவாள் எனத் தான் அலர்பற்றிக் கேளாதிருந்த தன்மையை உணராது, அவள் ‘தாய் அறிந்தால் கோபிப்பாள் எனச் சென்ற பேதைமையைத் தாய் எண்ணிக் கலங்குகிறாள் அவர்களுடைய உடன்போக்கிலே, இடை யிடையே அவர்கள் தங்கி இளைப்பாறிச் செல்ல, விருந்தாற்றி மகிழும்வண்ணம் செல்லமாட்டோமா எனவும் துடிக்கிறாள்.

பாடபேதங்கள்: 2. உணர.

204. மிக விரைந்து செல்க!

பாடியவர்: மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார். திணை: முல்லை. துறை: வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. சிறப்பு: வாண்னின் சிறு குடியினது வளம் (பண்ணனின் சிறு குடி எனவும் பாடம்); பாண்டியனின் போர் வெற்றி. -

(பாண்டியனுக்குப் படைத்துணையாகச் சென்ற தலைவன் ஒருவன், போர் வெற்றியுடன் முடிந்ததும், தன் தலைவியின் நினைவு மீதுறத் தன் பாகரிடம் தேரினை விரையச் செலுத்துக - வென இப்படிச் சொல்லுகிறான்) -

உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக், கடல்போல் தானைக், கலிமா வழுதி வென்றுஅமர் உழந்த வியன்பெரும் பாசறைச் சென்றுவினை முடித்தனம் ஆயின், இன்றே கார்ப்பெயற்கு எதிரிய காண்தகு புறவில், 5

கணங்கொள் வண்டின் அம்சிறைத் தொழுதி மணங்கமழ் மூல்லை மாலை ஆர்ப்ப, உதுக்காண் வந்தன்று பொழுதே: வல்விரைந்து, செல்க, பாக! நின் நல்வினை நெடுந்தேர்வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை 10 பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஒப்பும் காய்நெல் படப்பை வாணன் சிறுகுடித் தண்டலை கமழும் கூந்தல், ஒண்தொடி மடந்தை தோள்.இணை பெறவே.