பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 அகநானூறு - மணிமிடை பவளம்

வந்ததனையும், தானும் தன் காதலியுடன் கூடி இன்புறும் நினைவுடையவனாகிய நிலையினையும் குறிப்பாகக் காட்டுதற்கு.

பாடபேதங்கள்: 3. வேத்தமர் உழந்த 12. பண்ணன் சிறுகுடி

205. எளிதாக அடைக!

பாடியவர்: நக்கீரர். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி, வற்புறுக்குந் தோழிக்குச் சொல்லியது. சிறப்பு: கோசரை வென்ற பொலம்பூண் கிள்ளியின் காவிரிப்பூம் பட்டினத்துச் சிறப்பு.

(தலைமகன், பிரிந்து சென்றவன், குறித்த காலம் வந்தும் வராததனால், தலைவி வாடி வருத்தமுற்று மெலிவுற்றனள். அது கண்டு, அவளுடைய தோழி, அவளை ஆற்றியுரைப்பது கருதிச் சிலபல சொல்லத் தலைவி, இவ்வாறு தன் தோழிக்குத் தன் நிலையைக் கூறுகின்றாள்) -

‘உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின் செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத், தையல்! நின்வயின் பிரியலம் யாம்’ எனப் பொய்வல் உள்ளமொடு புரிவுஉனக் கூறி, -- துணிவில் கொள்கையர் ஆகி, இனியே 5

நோய்மலி வருத்தமொடு துதல்பசப் பூர. நாம்அழத் துறந்தனர் ஆயினும், தாமே வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி, நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி, 10

பூவிரி நெடுங்கழி நாப்பண், பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன செழுநகர் நல்விருந்து அயர்மார், ஏமுற விழுநிதி எளிதினின் எய்துக தில்லமழைகால் அற்சிரத்து மாலிருள் நீக்கி, 15

நீடு.அமை நிவந்த நிழல்படு சிலம்பில்; கடாஅ யானைக் கவுள்மருங்கு உதிர ஆம்ார்பு இழிதரு காமர் சென்னி, புலிஉரி வரியதள் கடுப்பக், கலிசிறந்து, நாட்யூ வேங்கை நறுமலர் உதிர, 2O

மேக்குஎழு பெருஞ்சினை ஏறிக் கணக்கலை கூப்பிடுஉ உகளும் குன்றகச் சிறுநெறிக்