பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் - புலியூர்க்கேசிகன் # 185

மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம், சிறுதொழின் மகாஅர் ஏறிச், சேணோர்க்குத் -- 5 துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன அம்மா மேனி, ஆயிழை, மகளிர் ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்து ஆராக் காதலொடு தாரிடை குழைய, 10 முழவுமுகம் புலரா விழவுடை வியனகர் வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து அடுபோர் வேளிர் வீரை முன்றுறை, நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை, பெரும் பெயற்கு உருகியா அங்குத் 15

திருந்திழை நெகிழ்ந்தன, தடமென் தோளே!

தோழி! நல்ல களிப்புடனே பேடிப்பெண்ணின் வேடத்தைப் பூண்டு கூத்தர்கள் ஆடுவார்கள். அப்படி ஆடும்போது கைகளைப் பின்னாக மேல்நோக்கி வளைத்து அவர்கள் அபிநயமும் செய்வார்கள். அப்படி வளைந்து மேலே நோக்கிய தாகப் பின்புறம் விளங்கும் அவர்களின் கைகளைப்போல எருமையின் கொம்புகள் பின்னாக வளைந்தனவாய் விளங்கும். விளக்கமுறப் பெருத்தும் முறுக்குண்டாகவும் அக் கொம்புகள் காணப்படும். அத்தகைய எருமையினது மயிரோடு அழகு பெற்றுத் தோன்றும் கரிய தோலினையுடைய முழவுகளின் பெரிய முதுகிலே, எவிய சிறுதொழில்களைச் செய்யும் சிறுவர்கள் ஏறி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அது தூரத்திலிருப்பவர்களுக்கு, உருண்டைக் கல்லின்மேலே இருக்கும் மந்திகளைப் போலத் தோன்றும். அத்தகைய வளமான ஊருக்கு உரியவன் நம் தலைவன்.

மாரிக்காலத்திலே விளங்கும் ஈங்கைச் செடியின் சிறந்த தளிரினைப் போன்ற, அழகிய மாமை நிறத்தினையுடைய மேனி வனப்பையும், ஆய்ந்த ஆபரணங்களையும் உடையவர் பரத்தை யர்கள். முத்தாரத்தைத் தாங்கியிருக்கும் பூரித்த முலைகளை யுடைய அவர்களது மார்பகத்தே, ஆராத காதலுடனே தழுவலின், தார் இடையிலே பட்டுக் குழையுமாறு, முடிவின் ஒலி ஒய்தலில்லாத, விழாவினையுடைய அவரது பெரிய மனையிலே மணத்தினைப் பொருந்தியவனாயினான் அவன். ஆதலினால்,

அவனோடு மீண்டும் கூடிக்கலந்து வாழும் செயலினை யானும் வெறுத்தேன். வேளிர்கள், போரிலே வெற்றி காணும்