பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 187

களைத்துக் குடித்து விடாய் தீரும் தன் மகளின் புதிய நிலையும், தாயின் மனக் கண்முன் தோன்ற அவள் இப்படிக் கூறுகின்றாள்.)

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம் குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ளோர்த்துப் படைஅமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர் நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக் 5

குறைக்குளம்பு உதைத்த கற்பிறழ் இயவின், வெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை, மிஞ்றுஆர் கடாஅம் கரந்துவிடு கவுள, வெயில்தின வருந்திய, நீடுமருப்பு ஒருத்தல் பினரழி பெருங்கை புரண்ட கூவல் 10

தெண்கண் உவரிக் குறைக்குட முகவை. அறனிலாளன் தோண்ட, வெய் துயிர்த்துப், பிறைநுதல் வியப்ப,உண்டனள் கொல்லோதேம்கலந்து அளைஇய தீம்பால் ஏந்திக் * கூழை உளர்ந்து மொழிமை கூறவும், •. 15 மறுத்த சொல்லள் ஆகி, வெறுத்த உள்ளமொடு உண்ணா தோளே!

அச்சம் உடைய கடல் நீர் பாய்ந்து, உப்பு வயல்களிலே காய்ந்து வெம்மையால் தம்மை மாறி உப்பாகிய வெண்கல்லான அமிழ்தினை, மேற்குத் திசைப் பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்வார்கள். அப்படிச் செல்லுவதற்கான நல்ல நிமித்தமும் பார்த்துப், பாதுகாவலுக்குப் படைத்துணையும் அமைத்துக் கொண்டு, பெரிய செயலாற்றலையுடைய ஆடவர்கள் எழுவார்கள். அவர்களுடைய, அடுக்கிய உப்பு மூட்டைகளைச் சுமந்து செல்லும் வெண்மையான முதுகினை யுடைய கழுதைகளின் தேய்ந்த குளம்புகள் உதைத்தலால், கற்கள் தடம்புரண்டு கிடக்கும் நிைைலயினையுடையன, கொடிய பாலைநிலத்து வழிகள், அவ்வழிகள் பாலைநிலத்தை ஊடறுத்துச் செல்வன போன்றும் விளங்கும்.

வண்டுகள் மொய்க்கும் மதநீரும் தன் கன்னங்களில் இல்லாது போன, வெயில் வருந்துதலால் வருத்தங்கொண்ட, நீண்ட கொம்புகளையுடைய களிறானது, சருச்சரை அழிந்த தன்பெரிய கையினாலே துழாவிப் பார்த்துச் சென்றுள்ள கிணற்றிலே, அறனற்றவனான அவள் காதலன், தோண்டத் தெளிவாக ஊறிவரும் உவர் நீரைக் குறைக்குடமாவே முகந்து, எடுக்க வேண்டும், -