பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
188
அகநானூறு - மணிமிடை பவளம்
 


தேனைக் கலந்து அளாவிய இனிய பாலை ஏந்திக்கொண்டு, கூந்தலைக் கோதியும் நயமான சொற்களைச் சொல்லியும், உண்ண மறுத்துப் பேசுபவளாகி, அதனையும் வெறுத்த உள்ளத்துடன் முன்னர் உண்ணாதிருப்பவள் எம் மகள்.

அவள், வெம்மையால் நெடுமூச்றிெந்து, பிறை போன்ற தன் நெற்றியும் வியர்ப்ப, அந்த நீரையும் எங்ஙனம் தான் பருகினாளோ?

என்று, மகட்போக்கிய தாய் தனக்குட் சொல்லி வருந்தினாள் என்க.

சொற்பொருள்: 1.அணங்கு-கண்டோரை அழகால் மயக்கிக் கொல்லும் பெண் தெய்வம்; ஆகவே, அணங்குடை முந்நீர் - அச்சந்தரும் கடல் எனவும் கொள்ளலாம். செறு - வயல், உப்புப் பாத்திகள் என்பர்.3 புள்ளோர்த்தல் - படுபட்சிப் பார்த்தல் என இந்நாள் வழங்கும் நிமித்தம் பார்த்தல் 5. பொறைய சுமையையுடையன. 10. பினர் - சருச்சரை, 11. முகவை முகக்கப்பட்ட நீர். 13. அறன் இலாளன் - அவள் காதலன்; அவளை அங்ஙனம் கொண்டு வருத்தியும், அவள் பிரிவால் பலரையும் வருத்தியும் செய்த செயல் குறித்துக் கூறியது.15. கூழை - கூந்தல். மொழிமை - நயமான மொழிகள்; மோழைமை பாடமானால், பணி மொழிகள்.

பாடபேதங்கள்: 15. மோழைமை கூறவும். 16. சொல்லாளாகி

208. உப்புச் சிறை!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் பாழிப் பறந்தலையிலே நன்னனோடு போரிட்டு வீழ்ந்ததும், துயருற்ற வேண் மகளிருக்கு அவன் அருளாது போக, அகுதை, அவர்களது துயர் ஒழித்ததும் ஆகிய செய்திகள்.

(தன் தலைவியைக் களவிலே கூடி மகிழ்ந்து நீங்கும் தலைமகன், அவளுடைய சிறந்த தன்மைகளையும், அவளைத் தான் கூடிய பேற்றையும் நினைந்து, இவ்வாறு அவளைப் போற்றி உரைக்கின்றான்.)

யாம இரவின் நெடுங்கடை நின்று,
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின், வெண்கோட்டு