பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 207

என்று, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. நாண் - கயிறு. நுண்கோல் - மெல்லிய தூண்டிற்கோல். 2. படுத்த - அகப்படுத்த, 4. வஞ்சி - ஒரு மரம். வாயுறுக்கும் - வாயிலே ஊட்டும். 6. பெட்டாங்கு - மனம் போனபடி 11. கண்ணி அயர்தல் - கண்ணி சூடி விளையாட்டு அயர்தல்.15 எவ்வம் துன்பம்.

விளக்கம்: ‘தானும் அவர்களுக்கு அஞ்சியவள் அல்லள்’ எனக் கூறுவாள், தான் அவர்களுடைய சேரிக்குள் சென்றாலே அவர்கள் உள்ளம்,வேல் மார்பிலே தைக்கத் துடித்து வந்தும் களிறுபோலப் படாதபாடு படும் என்றனள். அதனால், அவர்களை எச்சரித்ததும், தலைவனுக்குத் தன் பாலுள்ள விருப்பத்தை உறுதிப்படுத்தியதும் ஆயிற்று.

பாடபேதம்: 2. தண்புனல் அடைகரை,

217. எயிறு தீப்பிறப்ப நடுங்குவோம்!

பாடியவர்: கழாஅர்க் கீரனெயிற்றியார். திணை: பாலை. துறை: பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதுரச் சொல்லியது.

(தலைமகன், தான் தலைவியைப் பிரிந்து வினைசெயப் போகின்றது பற்றிய செய்தியைத் தோழியின்மூலம் சொல்லி யனுப்புகின்றான். அவளும் சென்று தலைவியுடனே அதனைப் பற்றி உரைக்க, அப்போது அவள் தன்னுடைய ஆற்றாமை மிகுதியால் சொல்லுகின்றாள்.)

பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை, எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன, துவலை தூவல் கழிய, அகல்வயல் நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக் கோடைப் பூளையின் வரடையொடு துயல்வா, 5

பாசிலை பெதுளிய புதல்தொறும் பகன்றை நீல்உண் பச்சை நிறமறைத்து அடைச்சிய தோலெறி பாண்டிலின் வாலிய மலரக் கோழிலை அவரைக் கொழுமுகை அவிழ, ஊழுறு தோன்றி ஒண்பூத் தளைவிட, - 1 O புலம்தொறும் குருகினம் நரலக் கல்லென அகன்றுறை மகளிர் அணிதுறந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இதுவென,