பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


"ρωορώ உரையும் புலியூர்க்கேசிகன் ok 209

சொற்பொருள்: 1. பொங்கல் வெண்மழை - பொங்குதலை யுடைய வெண்மேகம். 2. எஃகு - பஞ்சு கொட்டும் கருவி. 3. துய்ப்பட்டன்ன - பஞ்சு கொட்டுதலாற் பறந்து மென்மைப் படுதல் போன்ற.5 துயல்வர - அசைய.7.பாண்டில் கேடகத்திலே இருக்கும் வட்டக் குமிழ்கள். 17. பாழ்படு மேனி - பாழாகிப்

போகும் உடல்.

- பாடபேதங்கள்: 1. செய்து புறந்தந்த பெய்து புறந்தந்த 9.

கொழுமுகை உடைய 1. குயினா நரல. 19. பரப்ப,

218. பகல் வந்து அருள்க!

-. பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: தோழி, தலை மகளை இடத்து உய்த்துவந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால் தலைமகனை வரைவு கடாயது. - -

(புனக்காவலிலே கண்டு காதலித்துக் களவுக் கூட்டமும் பெற்ற தலைவி, புனம் காவல் ஒழிந்த பின்னர், இரவுக் குறியிலே ஒழுகி வருகின்றனள். அவர்கள் உறவைத் திருமணத்தால் பிணித்து நிலைபெறச் செய்யக் கருதிய தோழி, ஒருநாள் தலைமகளைக் குறித்த இடத்திலே கொண்டுவிட்டுவிட்டு வருபவள், தலைவனிடம் இப்படிக் கூறுகின்றாள்.) .

‘கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு முளைதருபு ஊட்டி, வேண்டுகுளகு அருத்த, வாள்நிற உரவின் ஒளிறுபு மின்னி, பருஉஉறைப் பல்துளி சிதறி, வான் நாவின்று, பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப் - 5

புயலேறு உறைஇய வியலிருள் நடுநாள், விறலிழைப் பொலிந்த காண்பின் சாயல், தடைஇத் திரண்டநின் தோள்சேர்பு அல்லதை படாஅ வாகும்,எம் கண் என, நீயும் இருள்மயங்கு யாமத்து இயவுக்கெட விலங்கி, 10

வரிவயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும் பெருமலை விடரகம் வர அரிது’ என்னாய், வரவெளி தாக எண்ணுதி, அதனால், நுண்ணிதின் கூட்டிய படுமாண் ஆரம் தண்ணிது கமழும்நின் மார்பு, ஒருநாள் 15 அடைய முயங்கேம் ஆயின், யாமும் விறலிழை நெகிழச் சாஅய்தும்; அதுவே அன்னை அறியினும் அறிக அலர்வாய்