பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் k 213

பொன்னால் செய்ததுபோன்ற கூர்மையான வெண் பற்களையுடைய செந்நாயினுக்கு அஞ்சிய புள்ளிகளையுடைய கலைமானானது, பொறிகள் பொருந்திய அரையினையுடைய விளாங்கனியின் புல்லிய ஒட்டிலே தோன்றிய துளையிலே, ஒலி எழுப்புதலினால், கோவலரது குழலோசை எனக் கருதித், தனக்குப் பாதுகாவல் என நினைத்து, அவ்விடம் நோக்கிச் செல்லும், நீரற்ற நெடிதான அத்தகைய நெறியிலே, மடப்பத்தையுடைய தன் அழகுத்தன்மை எல்லாம் அழிய வாட்ட முற்று, அவள்நடக்கவும் செய்வாளோ என்பதனை நினைந்தே, யானும் வருந்துகின்றேன்.

என்று, மகட்போக்கிய தாய் சொன்னாள் என்க.

சொற்பொருள்: நகர் - பெருமனை, சிலம்பு நக - சிலம்பு ஒலி செய்ய இயலுதல் - நடத்தல். 2. ஒரை ஆயம் - விளையாட்டுத் தோழியர். 4. வான் மலர் வெண்மலர், வெள்ளிக் கிண்ணத்தை உணர்த்தும். 5. சால் கை - சால்பு உடைய கை 6. பாடு - பகுதி. 10. இறந்தனள் - கடந்து போயினாள்.15. கோடை - கோடையிலே வீசும் மேல் காற்று. எடுத்தல் - துளை வழியே புகுந்து ஒலி எழுப்புதல். 17. மடத்தகை மடமையான மென்மைத் தன்மை.

உள்ளுறை: செந்நாய்க்கு அஞ்சிய கலைமான், விளாங்கனித் துளையிலே காற்றுப் புகுந்து எழுப்பும் ஒலியினை, அறியாமை யால் கோவலரின் குழல் என மயங்கித், தனக்குப் பாதுகாவல் கிடைத்தது என மகிழ்ந்தாற்போல, ஊரலருக்கு அஞ்சியமகள் காதலனின் பேச்சிலே மயங்கி, நீரற்ற நெடுவழியைத் தனக்குத் துணையாகக் கொண்டனளே என்று வருந்தியதாகக் கொள்க. இது, மகளின் பேதைமையையும் காதல் உறுதியையும் குடிப்பண்பையும் உணர்த்தும்.

விளக்கம்: ‘பந்தாடினும் களைப்பாளே என, யான், பாலினை என்பாடு எண்டனையாயின் இனி ஒருகால் நுந்தை பாடும் உண்ணென்று ஊட்டிப் பேணிய என் மகள், நீரற்ற நெடுவழியில் எப்படி நடந்து செல்வாளோ என நோகின்றாள் தாய். அந்த எண்ணம் மேலெழ, அவள் தன் காதலுனுடன் தன்னையும் மறைத்துச் சென்ற செயலையும்கூட அவள் மறந்து விட்டாள். தாய்மைப் பண்பின் விளக்கம் இந்தச் செய்யுள்.

பாடபேதங்கள்: 7 பிறந்ததற்கு ஒன்றும்.

220. நல் எழில் சிதையா ஏமம்!

பாடியவர்: மதுரை மருதனிளநாகனார். திணை: நெய்தல்.

துறை: இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது சிறப்பு: செல்லூர், ஊணுார், திருச்