பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் t புலியூர்க்கேசிகன் k 215

மதம் பொருந்திய யானையின் கூட்டம் எல்லாம் போர் முனையிலே அழியுமாறு, மன்னர்களின் பரம்பரைகளையே வேருடன் அறுத்த பரசாகிய வாளினையுடைய பரசுராமன், முன் காலத்திலே முயற்சியுடன் அரிதான முறையிலே செய்து முடித்த வேள்வியினிடத்தே, கயிற்றினை அரையிலே கட்டியிருந்த காணத்தகுந்த வனப்பினையுடைய அரிய காவலைக் கொண்ட உயரமான வேள்வித் தூணைப்போல, யாவரும் காண்பதற்கும் இயலாத மாண்புற்ற எழிலினையுடைய எம் தலைவியின் மார்பினை நினையுந்தோறும், நடுங்கும் உள்ளம் உடையவனாகிய, நீயும், நினது நெடிதான புறநிலையினைக் கருதி வருந்தினையானால் - --

முழக்கமிடும் கடலின் ஒதமானது, காலை வேளையிலேயும் அலைந்துகொண்டிருக்கும் மிகுதியான பழைய நெல்லையுடைய ஊணுரர் என்னும் அவ்விடத்திலே, ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிந்து இருத்தலைப் பெறாது கூடியேயிருக்கும் பெரிய பறவையாகிய மகன்றிலைப்போல நெஞ்சம் பொருந்தி, என்றும் காதல் மாறாத விருப்பமுடைய புணர்ச்சியினாலே -

பெரிய கழியிலே யிருந்தும் முகந்த நேரிய கோல்களை

யுடைய அழகிய வலையானது, வளைந்த புறத்தினையுடைய இறாமீனுடன் ஏனைய மீனினங்களையும் குவித்துக் கொண்டிருக்கும், நீண்ட கதிர்களையுடைய வயல்கள் நிறைந்த, தண்ணிய சாய்க்கானம் என்னும் இடத்திலயுள்ள, அழகிய குளிர்ந்த மூங்கிலை ஒப்பாகும் என்று, கடற்சோலையிலே தோழிமார்கள் ஆராய்ந்து பாராட்டிய வளைந்த முன்கையினை யுடைய இவளது பணைத்த தோள்களின், நல்ல அழகானது சிதையாதிருப்பதற்குரிய அரணாகிய ஒரு செய்தியை, யாம் தெளிவு கொள்ளுமாறு இனிச் சொல்வாயாக.

என்று, இரவுக்குறி வந்து நீங்குந் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. ஊர் - பெருங்குடியினர் வாழ்வது; சேரி - சிறு குடியினர் வாழ்வது. 2. தேரொடு மறுகுதல் தேருடன் வந்து சுற்றித் திரிதல், பணிமொழி - பணிவான வேண்டுதற் சொற்கள். 3. உருகெழு அழகு கெழுமிய, 4 சமம் - போர் முனை. ததைய அழிய, 5. மன்மருங்கு - மன்னர் பரம்பரை. மழு பரசு. மழுவாள் - பரசாகிய வாள். நெடியோன் - பரசுராமன்; அவன் திருமாலின் அவதாரமாதலினால்அவனையே திருமால் என்றனர்; இக்கதை வழக்கு அந்நாள் தமிழகத்தில் நிலைவியதனை இது காட்டும். 10. பனிக்கும் - நடுங்கும்1.புற நிலையினை - புறத்தனாக நிற்கும்