பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


216 அகநானூறு - மணிமிடை பவளம்

நிலையினை உடையவனானநீயும் எனலும் ஆம். 14. நோலா - பிரிந்துவருந்தியிராத இரும்பு - பெரிய புள்; மகன்றில் 15. காமர் புணர்ச்சி - விருப்பந்தரும் புணர்ச்சி. 17. முடங்குதல் - வளைதல். 18. சாய்க்கானம் - திருச்சாய்க்காடு என வழங்கும் ஊர்.19. யாணர் - அழகிய செழுமை. 20. சாய் இறை - வளைந்த முன்கை, 21 ஏமம் - பாதுகாவல்.

விளக்கம்: ‘சேரி என்பது ஊரின் பகுதியாக விளங்குவது. தனித்தனி இனத்தவர் ஒருங்கே சேர்ந்துவாழும்பகுதி பறைச்சேரி. பார்ப்பனச்சேரி, இடைச் சேரி எனவெல்லாம் வழங்கும். பரசுராமன், ‘மன்னர் பரம்பரையினரை எல்லாம் அழிப்பேன்’ எனச் சபதம் செய்தான் எனவும், அதற்குப் பலியானவர் பலர் எனவும் வழங்கும் செய்திகளை நினைக்கவும். செல்லூர், கோசர்களுக்கு உரியது எனப்பலவிடத்துங் கூறப்படுவது.அங்கே பரசுராமன் யாகம் செய்தான் என்று கூறுகிறார் புலவர். அந்த யாகத்துண்போல யாவரும் காணலாகா மாண் எழில் ஆகம் என்றது,மன்னரும் காண்பதற்கு முடியாத மாண்புற்ற எழில் நிறைந்த ஆகம் என்ற செல்வியைக் குறித்ததாகும். தோள் எழில் சிதையா ஏமம் என்றது, அவற்றைப் பிரியாது தழுவியிருத்தலான வரைந்து கோடலாகிய மணவினை என்னும் காவல்.

பாடபேதங்கள்: 4 குரூஉடச் சமம், 1. நிலையின் வருந்தினை 14. இருபுள்.

221. போவதற்கு இசைந்தேன்!

பாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன் படச் சொல்லியது.

(ஒரு தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்திலே ஈடுபட்டு ஒழுகி வருகின்றனர். தம் மகளின் மேனியிலே தோன்றிய மாற்றங்களைக் கண்ட பெற்றோர். அவளுக்கு வேறொரு வரனைப் பேசி மணம் செய்விக்க முயன்று, அதற்கான ஏற்பாடுகளிலேயும் ஈடுபடுகின்றனர். அதனை அறிந்த தோழி, தலைவனுடன் தலைவியும் உடன் போக்கிலே செல்லுவதற்கான முயற்சியை மேற்கொள்ளத் தூண்டுவாளாக. அவன் இசைவுபெற்று வந்து, தலைவியிடம் இப்படிக் கூறுகின்றாள்.)

நனைவிளை நறவின் தேறல் மாந்திப், புனைவினை நல்லில் தருமணல் குவைஇப், “பொம்மல் ஓதி எம்மகள் மணன்’ என,