பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


218 அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 1. நனை - பூவரும்பு. தேறல் - தெளிவு. 3.பொம்மல்-பொலிவு.ஓதி-கூந்தல்.5.புனைந்த-வடிக்கப்பட்ட 6. மதியுடம்பட்ட உள்ளம் ஒருமைப்பட்ட 11. கயவாய் - பெரிய வாய்.12. குழுமல் - முழங்குதல்.13. இரும் பிடி - கரிய பிடி பெரிய பிடியுமாம். - o

விளக்கம்: ‘நமர் வேற்று வரைவினை ஏற்று மணமுயற்சி களிலே ஈடுபட்டனர்; அதனால் நீ உடன் போக்கிலே நின் தலைவனுடன் சென்றுவிடுக’ என்றனள் தோழி. புலிக்குக் களிறு தப்பியதும் பிடி அஞ்சி ஒடுவதும் ஒருவர் துன்பத்திற்கு ஒருவர் வருந்தும் துணைமையுடன் செல்லல் வேண்டும் என்பதனை உணர்த்தும்.

பாடபேதங்கள்: 5. செயலை வெள்வேல். 7. வாங்குசினைக்

கொள்ளும்

222. செல்வோம் யாமே!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி: துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. சிறப்பு: ஆட்டனத்தி ஆதிமந்தியின் வரலாற்றுக் குறிப்பு.

(களவிலே உறவாடிவந்த தலைவன் இடையிற் சில நாட்களாக வராது போய்விட்டானாக, அதனால் தன் உள்ளம் வருந்தியிருந்தாள் தலைவி. ஒருநாள், அவன் வந்து சிறைப்புறத்தானாக இருப்பதறிந்த தோழி, தலைவியிடம் கூறுபவளே போல, அவனைத் தேடிச் செல்வோம்’ என, அவன் கேட்குமாறு உரைக்கின்றாள். அவனைத் தலைவியை வரைந்து கொள்ளுமாறு தூண்டுதற்குச் சொல்லப்பட்டது இது)

வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக் கான நாடன் இlஇய நோய்க்கு,என் மேனி ஆய்நலம் தொலைதலின்,மொழிவென்: முழவுமுகம் புலராய் கலிகொள் ஆங்கண், கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும். 5 ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின், ஆட்டன் அத்தி நலன்நயந்து உரைஇத், தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின், மரதிரம் துழைஇ, மதிமருண்டு அலந்த ஆதி மந்தி காதலற் காட்டிப் - 10

t

+