பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


236 அகநானூறு - மணிமிடை பவளம்

விளக்கம்: அவள் தலையைச் சிறிய அளவிலே கவிழ்ந்தனள், அது, அவளும் அதற்கு ஆர்வம் உடைமையைத் தெரிவித்த தனால், அவள் நினைவினால் யாம் இவ்விடத்தே பெரிதான துன்பம் அடைந்தோம் என்றனன். “துன்பம்’, அவளை அடைய விரும்பியதனாலே பெருகிய காமநோய். -

மேற்கோள்: ‘கைப்பட்டுக் கலங்கினும் என்னும் துறைக்கு, இதனை, மறைந்தவற் காண்டல் என்னும் சூத்திர உரையிலே காட்டு, இது தலைவன் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.

231. கூந்தன் மரீஇயோர்!

பாடியவர்: மதுரை ஈழத்துப் பூதன்றேவனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலை மகட்குத் தோழி சொல்லியது. சிறப்பு: பசும்பூண் பாண்டியன் காலத்து மதுரையின் வளம்.

(தலைவனின் பிரிவாற்றாமை காரணமாக வாடி மெலிந்தனள் தலைவி. அவளுக்குத் தேறுதல் கூறுபவளாகத் தோழி இப்படி உரைத்துத் தலைவன் தவறாது வருவான்’ என்ற உறுதியையும் கூறுகின்றாள்.) -

‘செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும், இல்லிருந்து அமைவோர்க்கு இல் எனறு எண்ணி, நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் கொடுவிற் கானவர் கணைஇடத் தொலைந்தோர், 5

படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக் கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் இழீஇ, உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருக வரும்-வாழி; தோழி!- பொருவர் 10 செல்சமம் கடந்த செல்லா நல்லிசை, விசும்பிவர் வெண்குடைப், பசும்பூட் பாண்டியன் பாடுபெறு சிறப்பின் கூடல் அன்னநின் ஆடுவண்டு அரற்றும் முச்சித் தோடுஆர் கூந்தல் மழீஇ யோரே. 15 தோழி! நீ வாழ்வாயாக! -

பகைத்து வந்தோரின் செருக்கினை அழித்தலும், வந்து சேர்ந்தோர்களுக்கு ஒரு துன்பம் வருமிடத்து உதவி செய்யும்