பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


240 அகநானூறு - மணிமிடை பவளம்

என்று வற்புறுத்திக் கூறி, அவள் துயரத்தை மாற்றுதற்கு முயல்கின்றனள் தோழி)

அலமரல் மழைக்கண் மல்குபனி வார, நின் அலர்முலை நனைய, அழாஅல்-தோழி!எரிகவர்பு உண்ட கரிபுறப் பெருநிலப் பீடுகெழு மருங்கின் ஓடுமழை துறந்தென, ஊனில் யானை உயங்கும் வேனில், 5

மறப்படைக் குதிரை, மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை

முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல் கூளிச் சுற்றம் குழிஇயிருந் தாங்கு, 10

குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த சுரன்இறந்து அகன்றனர் ஆயினும்,மிகநளிை மடங்கா உள்ளமொடு மதிமயக் குறாஅ, பொருளவயின் நீடலோ இலர்-நின் இருள்ஐங் கூந்தல் இன்துயில் மறந்தே! 15 தோழிகலங்கிய நின் குளிர்ந்த கண்களிலே பெருகி நிறைந்த கண்ணிர் வடிதலினாலே, நின்னுடைய பரந்த முலைகள் நனைந்து கொண்டிருக்குமாறு, நீ அழுதல் வேண்டாம்.

நெருப்புச் சூழ்ந்துகொண்டு எரித்த, கரிந்த புறத்தையுடைய பெரு நிலமானது, வளம் பொருந்திய வேற்றிடங்களுக்கு ஒடிக் கொண்டிருக்கும் மேகங்கள் கைவிட்டன என்றதனால், ‘தசையொழித்த யானையைப் போலக் கிடந்து வருத்த முடையதாக இருக்கும் வேனிற்காலத்திலே,

வீரஞ்செறிந்த குதிரைப்படைகளுடன், என்றும் புறமுது கிடாத வலிமையையும் உடையவன் உதியஞ் சேரலாதன். அவன், துறக்கத்தை உடையவன் உதியஞ் சேரலாதன். அவன், துறக்கத்தை அடைந்த கெடாத நல்ல புகழையுடைய தன் முன்னோர்களுக்குத் தென்புலக்கடன் ஆற்றினான்; அவர்கட்குப் பலியாக அவன் பெருஞ்சோறு அளித்த காலத்தே, கரிய பலவாகிய கூளிர்ச்சுற்றங்கள் அந்தப் பெருஞ்சோற்றை உண்பதற்குக் கூடியிருந்தன; அவற்றைப் போன்ற,

குட்டையும் நெடியவுமான குன்றுகள் பலவும் இடந் தோறும் காணப்படுகின்ற சுரத்தினைக் கடந்து, மிகப்பெரிதும் அடங்காத உள்ளம் உடையவராக, அறிவு மயங்குதலும் உடையவராகிச் சென்றவர் நம் காதலர் ஆயினும் நின்கரிய