பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


246 அகநானூறு - மணிமிடை பவளம்

‘கடல்கொண்டன்று எனப், புனல் ஒளித் தன்று எனக் கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த

ஆதி மந்தி போல, 20 ஏதம் சொல்லிப், பேதுபெரிது உறலே! தோழி! வாழ்வாயாக!

வெள்ளை நெல்லை அறுப்பவர்கள், நீலமணியைப் போன்ற மலர்களையுடைய நீர்முள்ளி நிறைந்த தெளிந்த நீரினைக் கொண்ட மடுவிலே கவர்ந்துகொண்ட பெரியமீனின், வரிகள் விளங்கும் நிறத்தினையுடைய கொழுமையான துண்டினைக் கடித்து உண்பார்கள். உண்டபின், அவர்கள் கொண்டு சென்று போட்ட களத்திலே, வெற்றிடம் இல்லாமல் எங்கும் நிறைந் துள்ள நீண்ட கதிர்களையுடைய பல நெற்கட்டுகளின், பனி பெய்துள்ள சாய்ந்த புறமெல்லாம் மூடியிருக்குமாறு, வயற் புறத்தேயுள்ள கரிய கிளைகளையுடைய மாமரத்தின் அசையும் கொம்புகளிலேயுள்ள புதிய பூக்கள் சொரியும் மழைத் துளிகளைப்போல உதிர்ந்து பரந்து கிடக்கும். அத்தகைய ஊரனாகிய நம் தலைவனது, காமத்தின் செவ்வியையும் பெருமையின் தகுதியையும் யான் அறியேன்.

இரவிலே, அழகு கிளர்ந்திருக்கும் சாந்தினுடன், அழகிய பட்டாடையும் ஒளிவீச, வளைந்த குழையினையுடைய மகளிரைப்போல, நம் தலைவன் ஒடுங்கி இருந்த இருக்கையினைக் கண்டேன். மடமையால் கட்டழிந்த

நெஞ்சினளும் ஆயினேன்.

தன் காதலனை இழந்ததால் கலங்கிய கண்ணினளாகியவள் ஆதிமந்தி. அவளைப்போல, “ஏற்றினைப் போன்று செல்லும் எழிலுள்ள நடையினையும், பொலிவுற்ற ஆற்றலினையும், தொகுதிகொண்ட கரிய சுரியலைச் சூட்டிய குடுமியையும் உடைய ஆட்டன் அத்தியைக் காணவில்லையோ?” என்று, நாடுகள்தோறும் ஊர்கள்தோறும் சென்று சென்று? கடல் கொண்டது போலும் எனவும், ‘புனல் ஒளித்துக்கொண்டது போலும் எனவும் கூறியவளாக, என்னுடைய துன்பத்தைப் பிறரிடம் எல்லாம் சொல்லிப் பெருந்துன்பம் கொண்டு மயங்குதலினின்றும் நான் பெரிதும் தப்பினேன்.

என்று, ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக் கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: முள்ளி - நீர் முள்ளி. அமன்ற - நிறைந்த 2. இலஞ்சி - மடு, 3. அரிநிறம் - வரிப்பட்ட நிறம். 10. அல்கல் -