பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் k 249

விளக்கம்: இளவனிேல் கூடியிருப்பார்க்கு மிக்க இன்பந்தந்து, கூடாதார்க்குத் துயரம் விளைப்பது; ஆதலின், அக்காலத்தும் வராத காதலரது பிரிவைக் கருதிய வருத்தம் இது வென்று கருதுக. ‘வாலெயிறு ஊறிய நீர் தவிர்விலர்’ என்றதனால், விரைவிலே வருவார் என்பது குறிப்பாயிற்று.

பாடபேதங்கள்: 10. புன்கம் உயர்த்த 15. தவிரலர்.

238. மருந்தும் உடையையோ!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துற்ை: இரவுக் குறிவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. சிறப்பு: நள்ளியின் சிறப்பான தன்மை.

r (இரவுக்குறியிலே கூடிவரும்தலைவனிடம், அவன் உள்ளத்தை விரைந்துவந்து மணத்தலிலே திருப்புதற்கு முயல்வாளான தோழி, இவ்வாறு கூறுகின்றாள்.)

மான்றமை அறியா மரம்பயில் இடும்பின், ஈன்று.இளைப் பட்ட வயவுப்பிணப் பசித்தென, மடமான் வல்சி தரீஇய, நடுநாள், இருள்முகைச் சிலம்பின், இரைவேட்டு எழுந்த பனைமருள் எருத்தின் பலவரி இரும்போத்து, 5

மடக்கண் ஆமான் மாதிரத்து அலறத், தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி இருங்கல் வியல்அறை சிவப்ப ஈர்க்கும் பெருகல் நாட, பிரிதி ஆயின், 10

மருந்தும் உடையையோ மற்றே-இரப்போர்க்கு இழை அணி நெடுந்தேர் களிறொடு என்றும் மழைசுரந் தன்ன ஈகை, வண்மகிழ்க், கழல்தொடித் தடக்கைக், கலிமான், நள்ளி நளிமுகை உடைந்த நறுங்கார் அடுக்கத்து, 15

போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் மென்பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த தண்கமழ் புதுமலர் நாறும்நறு நுதற்கே? மரங்களடர்ந்து பின்னிக்கிடக்கும் வழியறியவியலாத மரஞ்செறிந்த காட்டினுள்ளே, ஈன்று காவற்பட்ட வேட்கையுடைய பெண்புலியானது பசித்ததென்று,அதற்கு இளைய மானாகிய உணவைக் கொண்டு தருவதற்காக, நள்ளிரவிலே, இருண்டு குகைகளையுடைய பக்கமலையிலே