பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 253

துன்பத்தைக் கூறிப் பகற்குறி வேண்டியது இது. பகற்குறியும் வாய்த்தல் கூடாதாதலின், அவன் வரைந்து கோடலிலே மனஞ்செலுத்துபவனாதலால் வேண்டாம் என்பது கருத்து)

செவ்வி ஞாழற் கருங்கோட்டு இருஞ்சினைத் தனிப்பார்ப்பு உள்ளிய தண்பறை நாரை மணிப்பூ நெய்தல் மாக்கழி நிவப்ப, இனிப்புலம் பின்றே கானலும், நளிகடல் திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கில் 5 பன்மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய எந்தையும் செல்லுமார் இரவே, அந்தில் அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி, யாயும் ஆயமோடு அயரும்; நீயும், தேம்பாய் ஓதி திருநுதல் நீவிக், 10

கோங்குமுகைத் தன்ன குவிமுலை ஆகத்து, இன்துயில் அமர்ந்தனை ஆயின், வண்டுபட விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர்ப், பூவேய் புன்னை அம் தண்பொழில், வாவே தெய்ய, மணந்தனை செலற்கே, 15

சிவந்த பூவினையுடைய கொன்றையின் கருமையான கிளையிலேயுள்ள பெரிய கொம்பிலே, தனித்திருக்கும் தன்னுடைய குஞ்சினை நினைத்துக்கொண்ட, தணிவாகப் பறத்தலையுடைய நாரையானது, நீலமணிபோலும் நெய்தல் மலர்களையுடைய பெரிய கழியினின்றும் மேலே எழுந்து பறந்து போகக் கடற்கரைச் சோலையும் இப்போது தனிமை உடையதாயிற்று.

செறிந்த கடலின் அலைகளாகிய சுரத்திலே சிக்கி வருந்திய, திண்ணிய படகின் விளக்கொளியிலே, பிடித்த பலவாகிய மீன் கூட்டங்களை, என் அண்ணன்மார் தமக்குக் காட்டுவதற்காக, என் தந்தையும், இரவிலே கடற்கரைக்குச் செல்வாராயினர்.

என் தாயும், ஆயமகளிருடன், தெய்வத்தையுடைய குளிர்ந்த நீர்த்துறையிலே, அத் தெய்வத்தைக் கைகுவித்து வணங்கிப் போற்றி, அதற்குச் சிறப்பும் செய்தவளாயிருப்பாள்.

நீயும், தேனொழுகும் கூந்தலையுடைய தலைவியினது அழகிய நெற்றியைத் தடவிவிட்டுக், கோங்கு அரும்பினாற் போன்று குவிந்திருக்கும் முலைகளையுடைய மார்பகத்தே, இனிய துயில் கொள்ளுதலை விரும்பினாயானால், அவளை மணந்து கூடிச் செல்லுதற்கு, வண்டு மொய்க்க விரிந்த செருந்திப்