பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


254 அகநானூறு - மணிமிடை பவளம்

பூக்களையுடைய வெண்மணலிடத்து முடுக்கரிடத்தே பூக்கள் நிறைந்திருக்கும் புன்னை மரங்களையுடைய அழகிய குளிர்ந்த பொழிலினிடத்தே, இனிய பகற்போதிலேயே வருவாயாக,

என்று, இரவுக்குறிவந்த தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்தனள் என்க.

சொற்பொருள்: 1. செவ்வீ - சிவந்த மலர். 2. தனிப் பார்ப்பு - தனித்திருக்கும் குஞ்சு, தண்பறை நாரை - தணிவாகவே பறக்கின்ற இயல்புடைய நாரை, 3. மணிப்பூ - நீலமணி போன்ற நீலப்பூ 5. திரைச்சுரம் - அலைகளாகிய சுரம், சுரம் - பாலைநிரம். 7. அந்தில் - அவ்விடத்தே அசையுமாகும்.

மேற்கோள்: அணங்குடை - அயரும் என்பது, ‘நெய்தன் மகளிர் கிளையுடன்கூடி வருணற்குப் பரவுக்கடன் கொடுப்பது’ என, மாயோன்மேய’ என்னும் சூத்திர உரையினும், ‘பூவேய புன்னையந் தண்பொழில் நீ வா’ என்பதனைத் தோழி களஞ் சுட்டியதென்று, ‘தோழியின் முடியும் இடனுமாருண்டே’ என்னும் சூத்திர உரையினும்; இது, தோழி பகற்குறி உரைத்த’ எனப், பகற் புணர் களனே எனனும சூத்திர உரையினும், ‘பகல் நீவா வென்றல் வழுவமைதி என்று பொழுதும் ஆறும் என்னும் சூத்திர உரையினும் நச்சினார்க்கினியர் காட்டினர்.

பாடபேதம் : 1. கருங்கோட் டஞ்சினை.

241. பிரிந்து சென்றாரே!

பாடியவர்: காவன் முல்லைப் பூதனார். திணை: பாலை துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகள், வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.

(தன்னைப் பிரிந்துசென்ற தலைமகன், வருவதற்கெனக் குறித்த காலத்தினும் வராதுபோக, அதனால் தலைவியானவள் பெரிதும் வருத்தம் அடைந்தாள். அவளுடைய உடலழகும் கெட்டு மாறுபட்டது. அதுகண்டு, தலைவியின் தோழி மனங்கலங்கி, அவளுக்கு ஆறுதல்கூற முற்பட, அதனைக் கேட்ட தலைவி, இவ்வாறு கூறுகின்றாள்.)

“துனிஇன்று இயைந்த துவரா நட்பின் இனியர் அம்ம, அவர் என முனியாது நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், பிரியாக் காதலொடு உழையர் ஆகிய நமர்மன்-வாழி, தோழி!-உயர்மிசை 5