பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் - -புலியூர்க்கேசிகன் 257

செலவரத் துணிந்த, சேண்விளங்கு, எல்வளை நெகிழ்ந்த முன்கை, நேர்இறைப் பணைத்தோள், நல்எழில் அழிவின் தொல்கவின் பெறீஇய, 15

முகிழ்த்துவரல் இளமுலை மூழ்கப், பல்ாழ் முயங்கல் இயைவன் மன்னோ-தோழி!நரைகால் யாத்த நளிர்முகைச் சிலம்பில் பெருமலை விடரகம் நீடிய சிறியிலைச் சாந்த மென்சினை தீண்டி, மேலது 20

பிரசம் தூங்கும் சேண்சிமை, வரையக வெற்பன் மணந்த மார்பே!

தோழி! அரும்புகள் முதிர்ந்த வேங்கையின் அசைகின்ற மெல்லிய கொம்புகளிலே, சுரும்புகள் பூக்களின் வாயைத் திறந்து ஊதுதலால் சிதறிய பொற்றுளைப் போன்ற நுண்மையான மகரந்தப்பொடிகள், நீலமணி போன்ற தன் தோகையிலே உதிர்ந்து வீழ, அதனால் அழகு மிகுந்து விளங்கும் பொறிகளை யுடைய மயிலானது, களிப்புடன் ஆடிக் கொண்டிருக்கும் தன்மையை உடையது சோலை. அதனருகே பசுமையான தாளினையுடைய செந்தினையின் வளைந்த ஆரத்தையுடைய கிளிகளை, நம்முடனே இருந்து ஒட்டியவர் நம் காதலர். அவரது பண்புகள் தர, அதனால் இவ் வருத்தமும் நமக்கு வந்ததனை நம் தாயும் அறியாதவளாயினாள். - - “நுண்மையான நிறம் பொருந்திய தளிரைப்போன்ற அழகுவாய்ந்த என் மகளது துயரத்தின் காரணத்தை அறிதல் வேண்டும்” என்று கருதினவளாகப், பல பிரப்பரிசிகளைப் பலியாக வைத்தும், உண்மையறியாத வேலனைக் கொண்டு வந்து வெறியயரும் பெரிய களத்தினைப் பொலிவுறுமாறு போற்றித் துதித்தும், ஆட்டுக்குட்டியின் உயிரைப் பலியிட்டும், வெறியாட்டுச் செய்வதற்கும் முனைந்தாள். அதற்கு முன்பாகவே, ஏறி இறங்கும் வகையிலே நெகிழ்வாக அணிந்துள்ள நெடுந்துரத்திற்கும் ஒளிவிளங்கும் வளைகள் கழன்று வீழ்கின்ற முன் கைகளும், நேரிய சந்தினையுடைய பணைத்த தோள்களின் எழிலும் தம் அழகு கெடுவதனின்றும் நீங்கித், தம் பழைய அழகுகளைப் பெறுமாறு, நாமே சென்று,

தேன்கூடுகள் நிரம்பியிருக்கும் குளிர்ச்சியான குகைகளைக் கொண்ட மலைச்சாரலிலே, பெருமலைகளின் பிளப்பிடங் களிலே நீண்டு வளர்ந்துள்ள சிறிய இலைகளையுடைய சந்தனத்தின் மென்மையான கொம்புகளைத் தொட,