பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/275

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


260 அகநானூறு - மணிமிடை பவளம்

வரும் மென்மையான மழைத்துளியோடு கலந்து, ஊர்ப்பக்க மெல்லாம் அழகு படுத்துகின்றது. மழை நீரால் வரும் புது வரத்தும் நின்றுவிட்டது. கிளைத்தல் பொருந்திக் கருவிரிந்து விளைந்து முற்றி வளைந்துள்ள கதிர்களையுடைய வயலின் நெற்கதிர்களும் ஒலிசெய்து கொண்டிருக்கின்றன. அத்தகைய பசுமையான பள்ளக்கால்களைத் துழாவிக், கல் என்ற ஒலியுடன் கடுமையாக வந்து, இரக்கமற்ற வாடையும் நிலை பெற்றது. அது, இங்கே நில்லாது பெயர்ந்து, தம் தலைவரிடத்திலே சென்று, நீ நெடுங்காலம் பிரிந்து வந்திருக்கின்றனை என்று சொல்லாதோ?

பலவற்றையும் வெறுத்தவளாக வாழும் துணையற்ற இந்தத் தனித்த வாழ்க்கைக்கு, நம்முடைய சக்தியற்ற தன்மையை அவரிடம் எடுத்துச் சொல்லி, அவருடைய உள்ளத்து நிலையினையும் சென்று அறியுமானால், மிகவும் நன்மையாக யிருக்குமே!

ஆனால், இப்பொழுது அவ்வாடையானது, நீர் வடியும் கண்களை உடையேம் ஆகிய நமக்கே மீண்டும் துன்பம் விளைப்பதாயிருக்கின்றது. நம்முடைய பழைய தீவினையின் பயன் அவ்வளவே போலும்!

என்று, தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் ஆற்றேன் என்பதுபடச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. ஆய்ம்லர் ஆய்ந்து போற்றும் அழகிய மலர். துவரின் - துவர் நிறம் உடையவான, 2. வாங்குதுளை வளைந்ததுளை செய்த துளையும் ஆம் துகிர்-பவளம் ஈங்கைஈங்கைச் செடி, இசங்கு எனத் தென்னாட்டார் வழங்குவர். 4. ஊருழை அணிய ஊர்ப்பக்கத்தே - அழகு செய்ய. 5. புதுவரல் - புதுவெள்ளத்தின் வரத்து. 6. பீள் - கரு, பிறங்கு கதிர் - விளங்கும் கதிர். 7. பாசவல் - பசுமையான பள்ளக்கால்கள், வயல்கள். 8. கண்ணில் - கண்ணோட்டம் இல்லாத இரக்கமற்ற.10. துணை யில் வாழ்க்கை - தனித்திருக்கும் வாழ்க்கை. 11. வலத்தன்மை - வலியின் தன்மை, அது இல்லாததன்மை என்க.13.பனி-கண்ணிர்; பனித்துளி போல்வதால் பணியாறிற்று. 15. தொல்வினை - ஊழ்வினை; பழவினை.

விளக்கம்: ‘தன்னை வருத்தும் வாடை, தலைவரிடம் தனக்காகத் தூது சென்று தன் நிலையை எடுத்துரைத்துவந்தால், அவரது நிலையையும் அறிந்துவந்து சொன்னால் நல்லதாகுமே? என நினைத்து நோகின்றாள் தலைவி. * ... “ .

பாடபேதங்கள்: 9. நில்லாது ஏங்கி. 11. வலித்தன்மை, 12. அறியுமாயின், 15. தொழில் வினைப் பயனே,