பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் k 263

‘உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார் நன்றுபுரி காட்சியர் சென்றனர், அவர் என மனைவலித்து ஒழியும் மதுகையள் ஆதல் நீ நற்கு அறிந்தனை ஆயின், நீங்கி மழைபெயன் மறந்த கழைதிரங்கு இயவில் 5 செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை வல்வில் இளையர் தலைவர், எல்லுற, t வரிகிளர் பனைத்தோள், வயிறணி திதலை, அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பில், மகிழ்நொடை பெறாஅ ராகி, நனைகவுள் 10

கான யானை வெண்கோடு சுட்டி, மன்றுஒடு புதல்வன் புன்தலை நீவும், அருமுனைப் பாக்கத்து அல்கி, வைகுற, நிழல்படக் கவின்ற நீள்அரை இலவத்து அழல் அகைந் தன்ன அலங்குசினை ஒண்பூக் 15 குழல்இசைத் தும்பி ஆர்க்கும் ஆய்கண், குறும்பொறை உணங்கும் ததர்வெள் என்பு கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும் கல்நெடுங் கவலைய கானம் நீந்தி, w அம்மா அரிவை ஒழிய, 20

சென்மோ-நெஞ்சம்! வாரலென் யானே.

நெஞ்சமே! நற்செயல்களையே செய்யும் தெளிந்த அறிவினரான நம் தலைவர், உயிரினும் சிறப்புடையதான ஒள்ளிய பொருளை ஈட்டித் தருவதன் பொருட்டாகச் சென்றுள்ளனர் என்று, தன் உள்ளத்தை வலுப்படுத்திக் கொண்டு, வீட்டிலே தனித்திருக்கும் வலிமையுடையவள் நம் காதலியான அவள் ஆதலை, நீ நன்றாக அறிந்தனையானால், அவளை விட்டு நீங்கிச் செல்வாயாக

மழையானது பெய்தலையே மறந்துபோன, மூங்கில்களும் பட்டுப்போய்த் தோன்றும் சுரநெறியிலே, செல்லும் வாணிகச் சாத்தினைக் கொல்லும் வலிய வில்லினை உடையவர் ஆறலைப் போராகிய மறவர்கள். அவர்களுடைய தலைவர், இருள் வந்த பொழுதிலே, வரிகள் விளங்கும் பணைத்த தோள்களையும், அழகிய தேமல்கள் விளங்கும் வயிற்றினையும் உடைய கள்விலை மகளிர்கள் இருக்கும் வீட்டிடத்தே சென்றும், கள்ளிற்கு உரிய விலைப்பொருளினைப் பெற்றிராதவர்களாக, மதம் வழிந்து நனைந்த கன்னங்களையுடைய காட்டு யானையின் வெண்மை