பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
266 அகநானூறு - மணிமிடை பவளம்

என்று, தோழி தலைமகனுக்குக் கூறி வாயின் மறுத்தனள்

. -

சொற்பொருள்: 1. மோட்டு - வயிறு. 2. கதிர்மூக்கு - கூர்மையான மூக்குமாம். களவன் - களத்திலேயுள்ள சான் - றினன். 4. யாணர் - புதுவருவாய். 6. காஞ்சித் தண்பொழில். காஞ்சி மரங்கள் சூழ்ந்த குளிர்ந்த பொழில். வெண்ணிவாயில் - வெண்ணிப் பறந்தலை என்னும்இடம் 14 அழுந்துர் - தஞ்சை மாவட்டத்து ஒர் ஊர்; அழுந்துர் வேளுக்கு உரியது.

உள்ளுறை: ஆண்சங்கு ஆரல்மீன் சான்றோடு பெண் சங்கை மணம் புணர்வதுபோலத், தலைவனும் பாணனின் துணைகொண்டு பரத்தையைக் கூடினன் என்றனள்.

மேற்கோள்: “ஏற்றை என வருவதற்குப், பிணர் மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை என்பதனை, “ஆற்றலொடு புணர்ந்த” என்னுஞ் சூத்திரத்துப் பேராசிரியர் காட்டுவர்.

பாடபேதங்கள்: 2. கள்வனாக, 5. கூந்தல் நல்லவளோடு. 8. காய்சின முன்பின்,

247. அருளில்லாதவர் அவர்!

பாடியவர்: மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்; மதுரை மருதங்கிழார் மகனார் வெண்ணாகனார் எனவும் பாடம் திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(தலைமகன் தன்னைப் பிரிந்து வேற்றுார்க்குத் தொழில் முயற்சியிலே சென்றிருந்தனனாக. அவனுடைய பிரிவுக்கு ஆற்றாது கலங்கித் தன் நலம் அழிந்தவளாயினாள் தலைவி. அவள் பால் அன்புடைய தோழி அதனைக் கண்டு, தானும் பெரிதும் மனம் கலங்கி வருந்தினாள். அப்பொழுது தலைவி தன் தோழிக் இப்படிச் சொல்லுகிறாள்.) -

மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை நம்மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் அருளிலர்-வாழி, தோழி!-பொருள்புரிந்து, இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின், 5 பெருஞ்செம் புற்றின் இருந்தலை இடக்கும்

அரிய கானம் என்னார், பகைபட