பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#

274 அகநானூறு - மணிமிடை பவளம்

அது முதற்கொண்டு, அரிதாகப் படர்கின்ற துன்பத்தோடு பெரிதான தோள்களும் மெலிய, அழகிய வலைகளை உடைய வரான பரதவர்களது கானற்சோலையிலேயுள்ள அழகிய சிற்றுாரிலேயிருக்கும் கொடிய் வாயினரான பெண்களின் பழிச்சொற்களாலும் கலங்கி, முன்கை வளைகளும் கழன்றனம் ஆயினோம் யாம். நம்முடனே, இரவுப்பொழுதிலே, இக்கடற்றுறையும் உறங்காதிருக்கின்றதே! அதுதான் என்ன காரணமோ?

என்று, தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி, தலைமகட்குக் குறைநயப்பக் கூறினாள் என்க. -

சொற்பொருள்: மயங்குபிசிர் - நெருங்கிய துளிகள். 2. மல்குதிரை - மிகுதியான அலைகள். 3 வரிப்ப - அழகுசெய்ய, 4. இளமணல் - பூமணல் என்னும் நுண் மணல். காண்வர - காட்சிக்கு இனிதாக, 8. வரிமனை - இழைத்த வண்டல் மனை. 10. சாஅய் - மெலிந்துபோக.14. கங்குலானே - கங்குற்பொழுதிலே,

விளக்கம்: இரவெல்லாம் உறங்காது இருத்தலான், கடலின் அலைமுழக்கமும் கேட்டுக் கொண்டிருப்பதால், இரவு நேரத்தில் துறையும் துஞ்சாது என்றனள். அல்லாமல், அவன் இரவுக்குறி வேட்டுவந்து துறையருகே சுற்றுவதனால், துறை துஞ்சாது என்றனள் எனலும் பொருந்தும். துயரைத் தன் மேலேற்றிக் கூறினாள், தலைவியின் உறவையும் மனநிலையினையும் தான் அறிந்ததைப் புலப்படுத்துவதற்காக,

251. நந்தனின் செல்வம்

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை, துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. சிறப்பு: மோரியரின் தமிழகப் படையெடுப்பும், மகாபத்ம நந்தனின் செல்வவளமும் பற்றிய செய்திகள்.

(தலைமகன் பிரிந்து வினைமேற் சென்றிருந்த காலத்திலே, அவன் பிரிவால் ஏற்பட்ட துயரத்தால் வாடி நலிந்தனள் தலைவி.

தோழியும் அவள் நிலைகண்டு கவலையுற்றாள். தலைவியின்

நிலைமையை அறிவித்து வருமாறு தலைவனுக்குத் தூதரை அனுப்பியபின், தலைவியிடம் வந்து, இப்படி ஆறுதல் கூறுகின்றாள்.)

தூதும் சென்றன; தோளும் செற்றும்;

ஓதி ஒண்துதல் பசலையும் மாயும்; வீங்கிழை நெகிழச் சாஅய்ச்; செல்லலொடு