பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


288 அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 1. பிணங்கர் - பின்னிக் கிடத்தல், அரில் துறு. பொதும்பு - செறிவுள்ள இடம். 2. மடிதுயில் - அயர்ந்த உறக்கம். 3.நொடிவிடு - நொடித்து விடுதல்; ஒலி செய்தல். 4. நுங்கிற்கள் புளித்துப் பொங்கிய பனங்கள். 5. உகுவார் . ஒழுக விடுவார். மகிழ்வு இயங்கும் நடை - களிவெறியாலே நடக்கும் தள்ளாடிய நடை. 8. பொய்யால் - பொய்யாதே. மாயம் - வஞ்சனை.15. அமல்-செறிந்துள்ள படப்பை-தோட்டக்கால்கள். 18. அறிகரி - அறிந்த சான்றினர். கடர் அய் - வினவி அறிந்த 20. நீறு - சாம்பர். - -

விளக்கம்: ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டவன். அவளைக் கைவிட்டால், முக்கவரான கிளைகளின் நடுவே கட்டிவைத்து, நீற்றினைத் தலையிலே பெய்து தண்டனை விதிக்கும் வழக்கம் இப்பாட்டிலே சொல்லப்பட்டது. அதனால், அவன் குற்றம் ஊரறிந்த பழியுடையதாக, வேறு எவரும் அவனோடு உறவு கொள்ளாதவராகிப் போக, அவனும் மானம்கெட்டுப் பழியுடையவனாவான். பலருக்கும் அது எச்சரிக்கையாகவும் இருக்கும். இதனைக் கூறினாள், தலைவனின் செயலையும

பழியுடைத்தென்று எச்சரிக்கும் கருத்தால் என்க.

உள்ளுறை: ‘யாமை வள்ளை நீடிலைப் பொதும்பில் துயில் தலை வெறுத்து, நெடிவிடு கல்லிற் போகி, கள்ளின் ஒழுக்கை உண்டு, மயங்கிய நடையதாகி, வயலையும் உழக்கிச் சென்று, , அதன் அயலேயுள்ள ஆமபல் மெல்லடை ஒடுங்கும் ஊர என்றனள். இது, தலைவன் தன் காதலியிடத்து உறவை வெறுத்து, ஆரவாரத்துடன் பரத்தையர் சேரியிலே சென்று அவர் இன்பத்தை நுகர்ந்து, அந்த மயக்கத்தோடும், இற்பரத்தைபாற் சென்று தங்குபவனாயினான் என்று பழித்ததாகும்.

பாடபேதங்கள்: 6. நுகர்வார் உந்து, 8. பொய்யான் அறிவன்.

257. நடக்கும் வல்லமை

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். திணை: பாலை. துறை: உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது.

(தலைமகள், தலைமகனின்மீது கொண்டிருந்த காதல் மிகுதியாயிருந்தது. ஆனால், அதனை அவளுடைய வீட்டினர் எவரும் ஆதரிக்கவில்லை. எனவே, அவள் அவர்களுடைய காவலையும் கட்டுப்பாடுகளையும் கடந்து, தன் தலைவனுடன் உடன்போக்கிலே சென்றுவிடுகின்றாள். இடைவழியிலே, அவளுடைய மென்மையையும், தன்பாற் கொண்ட காதலன் பின்