பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 289

காரணமாக அவள் பாலைவழி நடத்தலாகிய துயரைப் பொறுத்து வழிநடத்தலையும் எண்ணி வியந்த காதலன், இவ்வாறு அவளைப் புகழ்கின்றான்.)

வேனிற் பாதிரிக் கூனி மாமலர் நறைவாய் வாடல் நாறும் நாள், சுரம், அரிஆர் சிலம்பின் சீறடி விசப்ப, எம்மொடு ஓர்ஆறு படீஇயர், யாழநின் பொம்மல் ஓதி பொதுள வாரி, 5

அரும்புஅற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச் கரும்புசூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும் வண்டுகடிந்து ஓம்பல் தேற்றாய்; அணிகொள நுண்கோல் எல்வளை தெளிர்க்கும் முன்கை 10 o’

மெல்இறைப் பணைத்தோள் விளங்க வீசி, வல்லுவை மன்னால் நடையே-கள்வர் பகைமிகு கவலைச் செல்நெறி காண்மார், மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து நார் அரை மருங்கின் நீர்வரப் பொளித்துக், 15 களிறுசுவைத் திட்ட கோதுடைத் ததரல் கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும், துன்புறு தகுவன ஆங்கண், புன்கோட்டு அளிலிவர் புற்றத்து அல்குஇரை நசைஇ வெள்அரா மிளிர வாங்கும் 20

பிள்ளை எண்கின் மலைவயி னானே.

கள்வர்களின் பகைமிகுந்த கவர்த்த வழிகள் பலவற் றுள்ளும், செல்வதற்கு ஓரளவு பாதுகாப்பான வழியைப் பின்வருபவர் கண்டு உணரும் பொருட்டாக, முன் செல்வோர் மரங்களின் மேலாகக் கவர்த்த சிறு கொம்புகளைச் சேர்த்து வைத்துச் செல்வர். அப்படிச் சேர்த்துள்ள ஒரு யா மரத்தினது, நாரினையுடைய அடிமரப் பக்கங்களிலே, நீர் வருமாறு உரித்துக் களிறு சுவைத்துக் கழித்துப் போட்ட சக்கையாகிய சுள்ளிகள், கல்லாமையினையுடைய உப்பு வாணிகர்கட்குத் தீமூட்டும் சுள்ளிகளாகப் பயன்படும்.

துன்பம் உறத் தகுவனவாகிய அவ்விடங்களில், சிறுசிறு புழைகளையுடைய சிறு துறுகள் படர்ந்திருக்கும். புற்றினிடத்தே, இராப்பொழுதிலே உண்ணும் புற்றாஞ்சோறாகிய இரையினை விரும்பிய கரடிக்குட்டிகள், அவ்விடத்தே இருக்கும்