பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/308

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 293
 


சொற்பொருள்: அருங்கடி - அரிய காவலையுடைய பாழி பாழிமலை, வடாற்காட்டுச் சவ்வாது மலைத்தொடர்களுள் ஒன்று.4.துன்னலம் அடையோம்.5.நனந்தலை - அகன்ற இடம். 7. அளை குகை. கல் - மணி, மாணிக்கக் கல்; அது மாய்தலாவது இருளின் காரணமாக எவ்வகை ஒளியுமின்றிக் கிடத்தல், 8. தில் - அசை 9. குறுமகள் - இளமைப் பருவத்தாள். நல்லகம் - நல்ல மார்பகம்.14, கைம்மிக அளவு கடந்து வெளிப்பட்டுப் பெருக,

விளக்கம்: தலைவியைத் தான் அடையவியலாத நிலைக்கு, அருங்கடி பாழியிலே ஒம்பினர் வைத்த பொன்னை அடைய வியலாத நிலையைக் கூறியது, தலைவியும் இற்செயிக்கப்பட்டுப் பெரிதும் காவல் உடையவளாயினள் என்பதை உணர்த்துதற்கு

மேற்கோள்: இப்பாட்டு, நெஞ்சினை இரவு விலக்கியது என, ‘மெய்தொட்டுப் பயிறல்’ என்னும் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டினர்,

பாடபேதங்கள்: துறை: அல்ல.குறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறியது. 8. வாழிய என் நெஞ்சே.

259. தோய்க நின் முலையே!

பாடியவர்: கயமனார் திணை: பாலை. துறை: உடன் போக்கிற்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.

(தலைவி இற்செறிக்கப்பட்டாள். அவள் காதலனை அவளால் சந்திக்க முடியவில்லை. காவலும் மிகுதியாயிற்று. அவள் வாடி நலிந்தாள். அவன் நிலையும் அஃதாயிற்று. இருவர் உறவுக்கும் உதவி நின்ற தோழிக்கு நெஞ்சம் உருகிற்று. காதலனுடன் உடன்போக்கிலே சென்றுவிடத் தலைவியைத் துணிவு கொள்ளச் சொல்லுகின்றாள்.)

        வேலும் விளங்கின: இளையரும் இயன்றனர்;
        தாரும் தையின; தழையும் தொடுத்தன;
        நிலம்நீர் அற்ற வெம்மை நீங்கப்
        பெயல்நீர் தலைஇ உலவைஇலை நீத்துக்
        குறுமுறி ஈன்றன, மரனே, நறுமலர் 5

        வேய்ந்தன போலத் தோன்றிப், பலஉடன்
        தேம்படப் பொதுளின பொழிலே; கானமும்,
        நனிநன்று ஆகிய பனிநீங்கு வழிநாள்,
        பால்எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
        போதுவந் தன்று, துதே, நீயும் 1O