பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


294 அகநானூறு - மணிமிடை பவளம்

கலங்கா மனத்தை ஆகி, என்சொல் நயந்தனை கொண்மோ-நெஞ்சுஅமர் தகுவி! தெற்றி உலறினும் வயலை வாடினும், நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும், நின்னினும் மடவள் நனிநின் நயந்த 15

அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர் புலிமருள் செம்மல் நோக்கி, வலியாய் இன்னும் தோய்க, நின் முலையே!

என்னுடைய நெஞ்சம் விரும்புகின்ற,சிறந்த தகுதியினை

உடையவளே!

வேல்களும், நெய்பூசப் பெற்றும் புதுக்கியும் விளக்கம் பெற்றன. ஏவலாளர் பலரும் புறப்பட்டனர் மாலைகளும் கட்டப்படுகின்றன. தழையுடைகளும் தொடுக்கப் பெறுகின்றன.

நிலமும் நீரற்ற தன் வெம்மை நீங்கியதாயிற்று. மழைநீர் தலைப்படுதலினால், மரங்கள் தம் வாடிய இலைகளை உதிர்த்துக் குறுகிய தளிர்களை ஈன்றுள்ளன. பொழிலின்கண், நறுமலர்கள் வேய்ந்திருப்பன போலத் தோன்றுவனவாக, பலவும் ஒரு சமயத்தே தேன்பொருந்த மலர்ந்து செறிந்துள்ளன. காடும், மிகவும் நல்லதாக ஆகிய பனிக்காலம் நீங்கி, அடுத்துவரும் இளவேனிற் காலத்தினை உடையதாயிற்று. பால்போல் ஒளிபரவிய நிலவினைக் கொண்ட மாலைப் பொழுதும் தூதாக வந்துள்ளது. -

மேடையிலுள்ள பூஞ்செடிகள் வாடிப்போனாலும், வயலைக் கொடிகள் வாடினாலும், நொச்சியின் மென்மையான கிளைகள் வளைந்த கதிர்க் கொத்துக்கள்மீது வாடிச் சாய்ந்தாலும், நின்னைக்காட்டினும் மடமை உடையவளான நின்னை மிகவும் விரும்புகின்ற அன்னையானவள், துன்பமுற்று வருந்துபவளாவாள். நின்னுடைய தமையன்மார், புலியும் மயங்கும் தலைமையுடன் காவல் காத்திருப்பர். அதனையும் கருதுவாயாக.

- இதனால், நீயும் கலங்காத மனத்தை உடையவளாகி, என் சொற்களை விருப்பமுடன் கேட்டு, அதன்படியே நடந்து கொள்வாயாக உடன் போக்கினையே துணிவாயாக இன்னும் நின் முலைகள் அவன் மார்பிடத்தேயே பொருந்துவதாக. (தலைவியைத் தழுவித் தோழி விடைபெறுகிறாள்)

என்று, உடன்போக்கிற்கு நேர்ந்த தோழி தலைமட்குச் சொன்னாள் என்க.