பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


296 . அகநானூறு - மணிமிடை பவளம்

புன்னை நறுவி பொன்நிறம் கொளாஅ, எல்லை பைப்பயக் கழிப்பி எல்உற, 10

யாங்குஆ குவள்கொல்? யானே நீங்காது, முதுரத்து உறையும், முரவுவாய் முதுபுள் கதுமெனக் குழறும், கழுதுவழங்கு, அரைநாள், நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த - அன்பி லாளன் அறிவுநயந் தேனே.

மலைகள் நிறம் பெற்றன. வண்டினம் மலர்களிலே பாய்ந்து ஊதிக் கொண்டிருக்கின்றன. சோலையிலுள்ள தாழைகளின் மேலேயிருந்து நாரையினங்கள் ஒலிக்கின்றன. கரையோரத்தில் விளையாடும் நண்டு வளையினுள்ளே செல்கின்றது. கடல் அலைகள் தம்முடைய முழக்கத்தைக் கைவிட்டன. மீன்பிடி படகுகள் தம் தொழிலை மறந்து கரையிலேயே கிடந்தன. துணையைப் பிரியாது சேர்ந்திருக்கின்ற அன்றிற் பறவையானது, மணல் மேட்டிலேயுள்ள பனையினது உள்மடலிலே சென்று அடைந்தது. கழியிலேயுள்ள பூக்கள் மணங்கமழும் இதழ்கள் குவியப் பெற்றனவாக விளங்கின. பொழிலிலேயுள்ள வீட்டுப் புன்னையின் நறுமலர்கள், பொன்னிறத்தைக் கொண்டனவாகத் தம் இதழ்கள் விரிந்தன. பகல் நேரத்தைப் பையப்பையக் கழியச்செய்து, ஞாயிற்று மண்டிலமும், தன் ஒளி மழுங்கி, மேற்றிசையிலே சென்று சேர்ந்தது. இனி, இரவும் வந்தவிடத்து, இவள் எந்த நிலையினை அடைவாளோ? (இவ்வாறு தோழி தலைவியிடத்திலே சொல்லுகிறாள்; அதற்கு அவள் பின்வருமாறு மறுமொழி சொல்லுகிறாள்);

முதுமரப் பொந்தினை விட்டு நீங்காது இருந்துவருகின்ற, முழங்கும் வாயினையுடைய முதுமையுற்ற பேராந்தையானது கதுமெனத் தன் குரலெடுத்துக் குழறும். பேய்கள் நடமாடும் அத்தகைய நள்ளிரவு வேளையிலே, நெஞ்சத்தை நெகிழ்விக்கின்ற துன்பத்தை நமக்குச் செய்த அந்த அன்பில்லாதவனுடைய அறிவுடைமையை உண்மையென எண்ணி, யானும் அன்று விதும்பினேனே! (அதுதான் இன்று துயருற்றேன்; தவறு என்மீதுதான் என்கிறாள் தலைவி)

என்று, இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியாற் சொல்லெடுக்கப் பட்டுத் தலைமகள் சொன்னாள் என்க,

சொற்பொருள்: 1. மண்டிலம் - ஞாயிற்று மண்டிலம், 2. மலர் பாய்ந்து - மலர்களில் விரைந்து சென்று, 3. கண்டல் - தாழை. 5. பாடு - ஒலித்தல். திமில் - மீன்பிடி. படகு.6. செக்கர் -