பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


298 - - அகநானூறு - மணிமிடை பவளம்

கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள்வி

வேனில் அதிரலொடு ‘விரைஇக் காண்வர, சில்ஐங் கூந்தல் அழுத்தி, மெல்லிணர்த் தேம்பாய் மராஅம் அடைச்சி, வான்கோல் இலங்குவளை தெளிர்ப்ப வீசிச், சிலம்புநகச் 5

சிலமெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, நின் அணிமாண் சிறுபுறம் காண்கம்; சிறுநணி ஏகு'என, ஏகல் நாணி, ஒய்யென மாகொல் நோக்கமொடு மடம்கொளச் சாஅய், நின்றுதலை இறைஞ்சி யோளே; அதுகண்டு, 10

யாமுந் துறுதல் செல்லேம், ஆயிடை அருஞ்சுரத்து அல்கியேமே-இரும்புலி - களிறுஅட்டுக் குழுமும் ஓசையும், களிபட்டு வில்லோர் குறும்பில் ததும்பும், வல்வாய்க் கடுந்துடிப் பாணியும் கேட்டே. 15 காட்டிடத்தேயுள்ள பாதிரியின் கரிய இதழ்களையுடைய ஒளியமைந்த பூக்களை, வேனிற்காலத்து அதிரற்பூவோடும் சேரக் கலந்து, காட்சிக்கு இனிதாக அமையும்படி, சிலவாகிய ஐவகையாக முடித்தலையுடைய தன் கூந்தலிலே செருகிக் கொண்டனள் தேன்பிலிற்றும் மெல்லிய பூங்கொத்துக்களான வெண்கடம்பின் பூக்களையும் சூடிக் கொண்டனள்; பெரிய கோற்றொழிலையுடைய விளக்கமான கைவளைகள் ஒலிமுழங்குமாறு கைகளை வீசிக்கொண்டும், காற்சிலம்புகள் ஒலி முழங்கவும், சிலவாகிய மெல்லிய ஒதுக்கத்துடனே மெல்லமெல்ல அடிவைத்து நடந்து வந்தனள். அவ்வேளையிலே,

பெரிய புலியானது ஒரு களிற்றைக் கொன்று முழக்கமிடும் ஒலியும், வில்லவர்களாகிய கானவரது சிற்றுரிலே அவர்கள் களியாடி மகிழ்தலால் எழுந்த வலிய முகத்தினையுடையதுடியின் பண்ணொலியும் கேட்டணம். அவற்றைக் கேட்டு, அவள் அஞ்சுவாளோ என எண்ணினேமாக, “நின்னுடைய அழகால் மாட்சிபெற்ற சிறிதான முதுகின் அழகினையும் யாம் கண்டு களிப்போம்; சிறிது எமக்கு முன்னாக நடக்க” என்றோம்.

அங்ஙனம் யாம் சொல்லவும், அவள் மேலும் நடத்தற்கே வெட்கம் கொண்டவளாயினள். ஒய்யென, மான் போன்ற நோக்கத்தோடு, மடமை கொண்டவளாக ஒதுங்கிநின்று, தன் தலையினையும் கவிழ்த்தனள்,