பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/316

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 301
 

படையுடன் சென்று வென்று, அந்த ஊர்முது கோசரின் இனிய உயிரைப் போக்கினான். அது கண்டு, தன் சினம் தணிந்தவளாயினாள் அந்த அன்னி மிஞரிலி. அப்பொழுது, அவள் அடைந்த உடற்பூரிப்பைப் போலப், -

பூக்கள் மலிந்து, அருவிகள் முழங்கிக் கொண்டிருக்கவும், சுனைகள் விளங்கவுமாகத் தோன்றும் மலைச்சாரலிலே, நுண்ணிய தேன்துளிகள் புதர்களின் மேலிடத்தை எல்லாம் நனைத்துக் கொண்டிருக்கும்; வண்டினம் மொய்க்கின்ற தேன் வளத்தையும், வண்மையினாலே மகிழ்கின்ற தன்மையினையும் உடைய பேகன் என்பவனின், கார்மேகஞ் சூழ்ந்த அத்தகைய பெருமலை மணம் கமழுமாறு போலத் தன் கூந்தலும் நறுமணம் கமழ, அழகிய இனிய சொல்லையுடையவளாகிய நம் தலைவியும் வந்தனள், நம்மைக் கூடி இன்பம் தந்தனள். அதனால், நாமும் மெய்பூரித்து அடங்காத உவகை உடையேமும்ஆயினேம்;

என்று, இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: முதைபடு பசுங்காடு - பழைமைப் பட்ட பசுமையுடைய காடு. அரில்பவர் - பின்னிக்கிடக்கும் கொடிகள். 2. உழவுறு - உழுதலைப் பெற்ற, 3 ஆகு வினை பயறு வித்துதற்குச் செய்தற்குரிய பக்குவங்கள். 4. அமன்ற செறிந்த, 5. வாய்மொழி - சொற்பிறழாத தன்மை. 6. ஊர்முது கோசர் - ஊர் மன்றத்தாராகிய முதுமையாளரான கோசர். 6. நவைத்த - கொடுமை செய்த சிறுமை - சிறுமையொடு பட்ட செயல். 7. வாலிது - தூயதான உடை. 8. படிவம் - உடல் தன்மை. 9. குறும்பியன் - காட்டு நாட்டுத் தலைவன். 10. செருவியல் நன்மான் - போர்த்திறனையுடைய நல்ல குதிரைகள். 12. மெய்ம்மலிதல் - உடல் புளகித்தல்; பூரித்தல். 13. ஆனா - அமையாத 14, அயம் - சுனைகள். 17. கொண்டன் மாமலை - கார்மேகம் தவழும் பெரிய மலை.

விளக்கம்: ‘இடுமுறை பயறு விதைப்பதற்கான முறைகள். ஆகுவினை - வித்தியபின் செய்ய வேண்டிய களைகொட்டுதல், வேலியிடுதல், நீர்பாய்ச்சுதல் போன்றவை. இவ்வாறு அன்னி மிDலி செய்த செயல், அறத்தை நிலைநிறுத்திய சிறந்ததொரு செயலாகும். பெண்மையின் உள்ள உறுதியும் பிறந்த குடியின் பழி துடைக்கச் செயலாற்றிய பெருமிதமும் இதனாற் புலப்படும்.

பாடபேதங்கள்: 3.யாடு விளைக் கலித்து, 4.பயரூழ் புக்கென. 18. வந்த வாறே.