பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/318

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 303

ஆறலை கள்வர்கள் மேலிடத்திலே அவர்களுக்குத் தோன்றாது மறைபவர்களாக, நீண்ட நிலையினையுடைய யாமரத்தின் கோட்டினைத் தாமிருக்கும் இடமாகக் கொள்வார்கள். அத்தகைய அரிய சுரத்திலே,

என் மகளைத் தன்னுடன் கொண்டவனாகச் சென்ற வன்கண்மை உடையவனாகிய இள்ைளுனுக்கு, அவள் கொண்டிருந்த காதல் உறுதியினை, யான் முன்னமே அறிந்திருந்தேனாயின்,

ஒளிவீசும் வேலினைக் கொண்டவன் கோதை என்பவன். அவன் பேணிக் காத்து நிற்கும் வஞ்சி நகரைப் போன்ற காவலும் வளமும் உடையது என்னுடைய வளமனை. அது விளக்கமுறுமாறு, எவ்வித வெறுப்புமின்றி, அழகிய நெற்றி பொலிவுற்ற பேதைமையினையுடைய என்னுடைய மகளினது வளரும் முலைப்பரப்பிலே இனிதாகத் துயிலும் வண்ணம், அவனையே இனிமையுற அவளுக்கு மணஞ்செய்தும் வைத்திருப்பேனே! ஐயகோ இப்போது அதுவும் முடியாமற் கழிந்ததே (அவள் என்ன ஆவாளோ?)

என்று, மகட்போக்கிய தாய் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. தயங்குதல் - எழுந்தும் மடிந்தும் அசைதல். 2. வயங்குதல் - விளங்குதல்; உருகெழு உட்குதல் பொருந்திய, 3. கயம் கண் வறப்ப - குளங்கள் நீர்வளம் அற்று இடமெல்லாம் வறண்டு போக 4 திருகிய-முரணிய பகைத்து வருத்திய பைதறு - பசுமை அற்ற, 55. கவலைய கவறுபட்ட நெறிகளையுடைய. 6. வம்பலர் - புதிதாக வழி வருவார். 7. மேலான் ஒற்றி - மேலிடத்தே மறைந்திருப்பாராக, 9. வன்கண் - வன்கண்மை; கொடுமை, கலங்காத தன்மை. 14. கோதை சேரமானின் பெயர்களுள் ஒன்று; அன்றிப் படைத்தலைவனான வில்லவன் கோதை என்றும் கொள்ளலாம். 3. துனி - வருத்தம், 15 வருமுலை - வளரும் இளமுலை. முலை முற்றம் - மார்பகம். -

விளக்கம்: தன் மகள், தன் களவு உறவினைத் தன்னையும் மறைத்துக், கோடையிலே அச்சம் தரும் கொடிய பாலையூடே சென்ற கொடிய தன்மையை நினைந்து, தாய் வருந்துகிறாள். அவனுக்கே அவளை மணமுடித்து வைத்திருப்பேனே எனவும் கூறுகின்றாள். -

பாடபேதங்கள்: 7. மேலாள் ஒற்றி, 8. நீடுநிலை மரா அத்து. 15. தெளிதுறு துயிலே.

f