பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/324

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


980 2-6 - புலியூர்க்கேசிகன்-309

நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல் இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ, 5

நீர்பெயர்ந்து ஆடிய ஏந்துஎழில் மழைக்கண் நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலை யாகிக், காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண்இழந்து, - ஆடினை என்ப மகிழ்ந! அதுவே யாழ்இசை மறுகின் நீடூர் கிழவோன் 10

வாய்வாள் எவ்வி ஏவன் மேவார் நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண், கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்இமிழ் அன்ன, கவ்வை ஆகின்றால் பெரிதே; இனிஅஃது 15

அவலம் அன்றுமன், எமக்கே, அயல கழனி உழவர் கலிசிறந்து எடுத்த கறங்குஇசை வெரீஇப் பறந்த தோகை அணங்குடை வரைப்பகம் பொலியவந்து இறுக்கும் திருமணி விளக்கின் அலைவாய்ச் 20

செருமிகு சேஎயொடு உற்ற குளே!

“மகிழ்நனே! புதுப்புனல், கரையின் உச்சியைப் பொருந்து மாறு உயர்ந்ததாகவும், நீண்ட பெரும்பரப்பினை உடைய தாகவும், அழகியதாகவும், காண்பார்க்கு விருப்பந்தருவதாகவும் விளங்குகின்றது. அதன்கண், நேற்று, ஆற்றல் மிகுந்த் களிற்றினைப்போலப், புணையின் தலைப்புறத்தினைத் தழுவியவனாக நீயும் புனலாடினாய். -

நரந்தத்தின் மணம்கமழும் அடர்த்தியான கருங் கூந்தலையுடைய இளம்பெண்கள் துணையோடு, நீராடலுக் குரிய அணிகளை உடுத்துக்கொண்டு, நீரின்கண் பெயர்ந்து நீர் விளையாடினாய்! மிகுதியான அழகினையுடைய குளிர்ச்சியான அவர்களுடைய கண்கள் நின்னைப் பார்க்குந் தோறும் நீயும் விருப்பத்தைக் கைவிடுதல் இல்லையாயினாய்! காமம் அளவு கடந்த நின்பாலும் பெருகுதலினாலே, வெட்கமும் இழந்த வனாக, அவர்களோடு நீயும் கலந்து ஆடினாய்!” இங்ஙனம் பலரும் நின்செயலைக் குறிப்பிட்டுக் கூறுவார்கள்.

வாள் வாய்த்தலை உடையவன் எவ்வி என்பவன். அவன், யாழ் இசை முழங்கும் தெருக்களையுடைய நீடூருக்குத் தலைவன். அவன், தன்னுடைய ஏவலை ஏற்றுக்கொள்ளாதாராகிய, பசுமையான பூண்களை உடையவரான தனக்கு மாறு