பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


310 அகநானூறு -மணிமிடை பவளம்

பட்டவர்களை எல்லாம், அவர்களுடைய பெரிய வலிமையைத் கெடுத்து முற்றவும் அழித்தான். அரிமணவாயில், உறத்துர் ஆகிய அவ்விடங்களிலே, அந்த வெற்றிக் கொண்டாட்டத்திலே, அவன் அளித்த கள்ளோடு கூடிய பெருஞ்சோற்று விழாவிலே, பகற்பொழுதிலே எழுந்த ஆரவாரத்தைப் போல, நின் செயலால் ஊர் முழுவதும் எழுந்த அலரும், பெரிதும் ஆரவாரத்தை உடையதாக இருக்கின்றது. -

இனி, அதுவும் எமக்குத் துன்பம் தருவது அன்று, அயலேயுள்ள வயல்களிலே, உழுபவர் செருக்குமிகுந்தவராக எழுப்பிய, ஒலிக்கும்இசையினுக்கு அஞ்சிப் பறந்து போயின மயிலானது, தெய்வத்தையுடைய மலையகத்திடத்தே, அவ்விடம் அதனால் அழகுபெறுமாறு வந்து தங்கும்.

அத்தகைய, அழகிய மணிவிளக்குகளை உடையதான அலைவாய் என்னும் இடத்தே வீற்றிருந்தருளும், போர் வலிமை மிகுந்த முருகனோடும் பொருத்தி, என்னை மணந்த போது. செய்த நின்னுடைய சூளுறவே எனக்குத் துன்பம் தருவதாகும்;

என்று, பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொன்னாள் என்க. -

சொற்பொருள்: 1. கோடு-கரை நிவந்த உயர்ந்த 2 பா அய - விருப்பத்தையுடைய 3. மைந்து - வலிமை ஆற்றல். 4. நரந்தம் - நரந்தம் புல். 7. தவிர்விலை - தவிர்தல் இல்லாதவனாயினை. 12. பொருந்தலர் - பகைவர். 14. எல்இமிழ் - பகலில் எழுந்த இசை - முழக்கம். 17. கலி - செருக்கு. 29. செருமிகு சேய் - முருகன்.

விளக்கம்: தலைவியின் உள்ளத்திலே, தலைவன் பரத்தைய ரோடு புதுப்புனல் ஆடினான் என்ற வருத்தமே மிகுதியாக இருப்பினும், அதனை அவள் கூறவில்லை. நின் செயலால் இருப்பினும், அதனை அவள் கூறவில்லை. நின் செயலால் எழுந்த ஊரலர் பெரிது எனப் பழிச்சொற்களுக்கு வருந்தியும், “நின்னைப் பிரியேன் என முருகன் முன் செய்த சூளுறவு ‘பொய்த்தாய்’ என, அதனால் அவனுக்கு வரும் ஏதங்களுக்கு வருந்தியும் சொல்லும் கற்புத்திறம் காண்க

உள்ளுறை: உழவர்களின் இசைக்கு அஞ்சிப் பறந்த மயிலானது, அணங்கினையுடைய மலையகத்தே அழகிதாகச் சென்று தங்கும் என்பது, தலைவனும் ஊரிலே எழுந்த பழிச் சொற்களுக்கு அஞ்சியவனாகக், கட்டுப்பாடுடைய மனைக்குத் தங்குவதற்காக வந்தனன் என்பதை உணர்த்தும்.