பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் ok 313

விளக்கம்: ‘தோளே தவறுடையன என்றதனால், தானும் அவன்பாற் காமுற்று நெஞ்சம் நெகிழ்ந்ததான தன்னுடைய நிலையையும் கூறினாள். அவன் சொன்னாலும், அதனைத் தெளியாது யானும் இசைந்து கூடினேனே அதுதான் தவறு என்கிறாள். அன்றி, நம்மீது அன்புடைய அவரை விடாது பிணித்துக்கொள்ள அறியாத தோள்களே தவறுடையன எனலும் ஆம். -

பாடபேதம்: 1. நெஞ்சு நெகிழ்க்குந.4 உளைதல் ஆன்றி சின். 7.கொள்ளை வறட்பூ முசுவினம்.12. உதிர்வன ஓசை16. நெகிழ்ந்த

268. பழி எய்தினேனே!

பாடியவர்: வடம வண்ணக்கன் பேரி சாத்தனார். திணை: குறிஞ்சி. துறை: குறைவேண்டிப் பின்னின்ற தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது.

(தலைவன், தான்விரும்பிய தலைவியை அடைந்து கூடும் முயற்சியிலே தோல்வி கண்டான். ஆனால், அவன் உள்ளத்திலே எழுந்த காதல் மிகுதியாதலால், அது கட்டுக் கடங்காது கைம்மிகவே, அவளுடைய தோழியின் உதவியை நாடினான். அவளும் அவன்மீது இரக்கங் கொண்டாள். தலைவியை அணுகித் தலைவனுக்கு அருள் செய்யுமாறு இப்படிக் கூறுகின்றாள்.)

அறியாய்-வாழி, தோழி! - பொறியரிப் பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்த குருதிச் செங்களம் புலவுஅற, வேங்கை உறுகெழு நாற்றம் குளவியொடு விலங்கும் மாமலை நாடனொடு மறுஇன்று ஆகிய 5

காமம் கலந்த காதல் உண்டெனின், நன்றுமன்; அதுநீ நாடாய், கூறுதி; நானும் நட்பும் இல்லோர்த் தேரின், யான் அலது இல்லை, இவ் உலகத் தானேஇன்னுயிர் அன்ன நின்னொடுஞ் சூழாது. 10 முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவிச், செய்துபின் இரங்கா வினையொடு மெய்அல பெரும்பழி எய்தினென் யானே! தோழி, நீ வாழ்வாயாக! யான் சொல்வதனையும் கேட்டு அறிந்து தெளிவு கொள்வாயாக புள்ளிகளையும் கோடு களையும் கொண்ட, அழகிய நெற்றியை உடையது யானை.