பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/331

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


316 அகநானூறு - மணிமிடை பவளம்

இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர், தைஇ நின்ற தண்பெயல் கடைநாள், பொலங்காசு நிறைந்த கோடுஏந்து அல்குல் 15

நலம்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வரப் பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து வயிர்இடைப் பட்ட தெள்விளி இயம்ப வண்டற் பாவை உண்துறைத் தழீஇத், திருதுதல் மகளிர் குரவை அயரும் 20

பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை, வாணன் சிறுகுடி, வணங்குகதிர் நெல்லின் யாணர்த் தண்பனைப் போதுவாய் அவிழ்ந்த ஒண்செங் கழுநீர் அன்ன நின் கண்பனி துடைமார் வந்தனர் விரைந்தனர். 25

தோழி! ஏறுகளை உடைய ஆணினத்து, செறிவான சுரைகளையுடைய வெள்ளிய வேலினரான மழவர்களை அஞ்சாமையையுடைய வீரர்கள் சிலர் தடுத்து நின்றனர். அவர்களது நல்ல புகழினை நிலைநிறுத்துமாறு, பெண் யானைகள் கிடந்தாற்போல விளங்கும் குறியவான பொற்றை களின் பக்கத்தே, நட்டுவைத்தவைபோலப் பல கற்கள் இயல்பாகவே விளங்கின. நீண்ட அக்கற்களிலே, அவற்றின் அகன்ற இடத்திலே செதுக்கப் பெற்றிருந்த பல பெயர்களையும் கழுவிச் சுத்தம் செய்தனர். கழுவிய ஈரமான புறத்திலே, நறுமணமுள்ள மஞ்சளைப் பொலிவுடன் பூசினர். அம்பினைக் கொண்டு அறுத்தெடுத்த ஆத்திப்பட்டையாகிய நாரிலே, சிவந்த கரந்தைப் பூவைத் தொடுத்து இயற்றிய கண்ணியை, வரிகளையுடைய வண்டினம் மொய்க்குமாறு அதன்மேற் சூட்டினர். இப்படிப் புனைந்து வழிபட்டு விட்டுக், கழல் விளங்கும் காலினரான வீரர்கள், தம் ஊருக்குத் திரும்பினர். அத்தகைய கடத்தற்கரிய சுரநெறியினையும் கடந்து சென்றோர் நம் தலைவர். - -

தைத் திங்களிலே எஞ்சி நிற்கும் குளிர்ந்த பெயலின்

கடைப்பட்ட நாட்களிலே -

பொற்காசுகளைத் தொடுத்து அணிந்த பக்கம் உயர்ந்த அல்குலினிடத்தே, நலம் வாய்ந்த பெரிய பூங்கொத்துக்கள் குழையோடுஞ் சேர்ந்து அசைந்து கொண்டிருக்கும்; ஒலி பரந்து எழுகின்றதான பெரிய வாயினையுடைய மண்டிலத்து ஊதுகொம்பினிடத்திலிருந்து, தெளிந்த இசையானது எழுந்து பரவும்; வண்டல் விளையாட்டிற்கு உரிய பாவையை நீர்