பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/332

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் ok 317

உண்ணும் துறையிலே ‘கொண்டுவந்து வைப்பர்; அழகிய நெற்றியினை உடையவரான மகளிர்கள், அதனைப் புனைந்து போற்றிக் குரவையாடிக் கொண்டும் இருப்பார்கள்.

அத்தகைய சிறப்புடைய கடற்கரையிலே, கானற் சோலை சூழ்ந்த ஊராகிய வாணனது சிறுகுடி விளங்கும். அவ்விடத் துள்ள, வளைந்த கதிர்களையுடைய நெற்பயிராகிய புது வருவாயினைக் கொண்ட தண்மையான வயலிலே விளங்கும், அரும்பு வாயவிழ்ந்து மலர்ந்திருக்கும் ஒளியுடைய செங்கழுநீர்ப் பூப்போன்ற நின் கண்களினின்றும் சோரும் கண்ணிரைத் துடைப்பதற்காக, நின் காதலரும், அதோ விரைந்து வந்துள்ளனர். ஆதலால்.

நெகிழ்ந்து கழன்ற தொடிகள் நின் தோள்களிலே ஏறுவதாக! நின் துயரமும் தீர்வதாக நெளிந்த கருமையான நின் கூந்தலிலே மாலையினையும் இப்போதே புனைவாயாக!

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தினாள் என்க.

சொற்பொருள்:1.இவர்க-ஏறுக தோள் பூரிப்பதாக என்பது கருத்து.2.நெறி-நெளிவு.கோதை-தலைமாலை.4. சுரை என்பது வேலின் முனையினைக் கம்புடன் செருகும் உலோகப் பகுதியினைக் குறிக்கும்; செறிசுரை - செறிவான சுரையினைக் கொண்ட “மழவர் - ஓர் இனத்தார்; பெரும்பாலும் ஆறலை கள்வராக இருந்தவர். 5. தறுகணாளர் - அஞ்சாமையுடையோர் கரந்தையார் என்க. 6. குறும்பொறை - குட்டையான பொற்றை. 78. நட்டபோலும். மண்ணி இது இயல்பாக விளங்கிய நீண்ட கற்களிலேயே வீரர்களின் பீடும் பெயரும் செதுக்கி வைத்தான செயலைக் குறிக்கும்; பாறைகளைச் செதுக்கியும் குடைந்தும் செய்யும் கற்றளிவேலைகள் இவை என்க. 9, ஈர்ம்புறம் - ஈரமான பக்கம்.10. ஆர்நார் உரிவை ஆத்திப் பட்டையிலே கிழித்த நார்; ஆர் - ஆத்தி 11. கரந்தை கரந்தை மலர். 13. இளையர் - வீரர். 15 கோடேந்து - பக்கம் உயர்ந்த 16. மாக்குரல் குழை பெரிய கொத்தான தழை. தழையுடைய இப்படி அமைக்கப்படுவதை இன்றும் பழம்பொருட்சாலைகளிற் சென்று காண்க.19.வண்டற் பாவை - இளமகளிர் வண்டல் வழிபாட்டிற்குக் குறித்த பாவை. 24, 25. கழுநீர் அன்ன கண் - அழுது கல்ங்கியதால் செங்கழுநீர்போலச் சிவந்து நிறம் மாறுபட்டுப்போன கண்கள்.

விளக்கம்: தைத் திங்களில், கன்னியர் நீர்த்துறையிலே பாவையைப் புனைந்து வைத்து நீர்த்தெய்வத்தை வழிபடும் மரபுடையவர்; இதுவே பின்னாளில் ‘பாவை நோன்பாயிற்று'