பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/334

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 319 -

கொண்டிருப்பார்கள். அத்தகைய மென்னிலத்திற்கு உரியவனான தலைவனே! o

இவளுடைய தோள்களோ மெலிந்தன. சிவந்த இறாமீன் கலக்கிய பிதிர்பட்டு மோதும் அலைகளின் நுரைகள், பெரிய அடிமரத்தினையுடைய புன்னையின் வளைந்த கிளைகளிலே தங்கியிருக்கும், கானற்சோலையை அடுத்துள்ள அழகிய பெரிய துறையினையே இவள் நோக்குவாளாயினள். கொய்யப் பெற்ற பிடரிமயிரினையுடைய குதிரைகளை உடையவனும், கைவண்மை உடையவனும், பெரிய் தலைவனுமாகிய, நல்ல தேனினையுடைய குட்டுவனது கழுமலத்தைப் போன்ற, தன் மேனியின் சிறந்த நலம் எல்லாம் அழிந்து போகுமாறு, உறக்கமற்ற கண்ணிளாகவும் கலங்கியிருப்பா ளாயினள்.

நீயோ வென்றால், கடவுள் மரத்தினையுடைய முள்ளால் மிடையப் பெற்றிருக்கின்ற கூட்டிலே, தன் சேவலோடுங் கூடற் வாயாத சிறிய கரிய அன்றிற் பேடையானது, துன்பமுற்றுக் கிடந்து வருந்துகின்ற இரவுவேளையும், நின்னுடைய ஊருக்குப் போய்விடவே எண்ணுகின்றனை. யான்தான் இங்கே நோக்கின்றேன்!

என்று, பகற்குறிக்கண் வந்து நிற்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயினாள் என்க. :

சொற்பொருள்: 1. வள்ளிதழ் நீலம் - வளவிய இதழ்களை யுடையவான நீலமலர். 2. பாக்கம் - கடற்கரையூர். 3. ஞாழல் - புலிநகக் கொன்றை. 5. சேயிறா - சிவப்பான இறாமீன்கள். துழந்த - கலக்கிய, 9. குட்டுவன் - சேரன். கழுமலர் - நென்மலி என வழங்கும் கொங்கு நாட்டு இடத்தாகிய பழைய பேரூர். சோழன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்காலிரும் ப்ொறைக்கும் நடந்த கழுமலப் போரினை நினைக்க, கரிகாலன் இவ்வூரிலிருந்தான் எனவும், களிறு இங்கு வந்து இவனைத் தூக்கிச் சென்றது எனவும் உரைப்பர்.12. கடவுள் மரத்த கடவுள் வீற்றிருப்பதாகத் தொழப்படும் மரத்தையுடைய கடவுள் மரங்களில் வீற்றிருந்து அருள்புரிவதாகத் தொழுவது தமிழரின் பழங்கொள்கை. இதன் விளக்கமாக, இன்றும் தென்னாட்டுக் கோயில்களில் தல விருட்சங்களைக் காணலாம்.

உள்ளுறை: பாக்கத்துப் பரதவர் புலால் நாற்றம் போக, நீலமும் கொன்றையும் சேர்த்துக் கட்டிச் சூடுவது போல, நீயும் ஊரலர் ஒழிய மணம் சேர்தல் வேண்டும் என்றனள். கடற்றுரையிலே மோதுகின்ற அலைகளின் நுரைப் பிதிர்கள் புன்னைக் கிளைகளில் தங்கித் தோன்றுவது போல,