பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/337

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


322 அகநானூறு - மணிமிடை பவளம்

மேற்கொண்ட பற்று. 11. வல்வது - வன்மையுடையது; வன்கண்மையொடு பட்டதாக எனப் பொருள்படுதலும்; 12. களிமவி கள்ளில் - கள்வளம் நிறைந்த கள்ளிலும் ஆகும். 14. காம்பு - மூங்கில்.

விளக்கம்: நெல்லி, வறண்ட நிலப்பாங்கிலும் வளர்கின்ற தன்மையுடையது. அதன் காயோ நீர் வேட்கை தீர்ப்பது. ஆதலின், பாலைவழியிலே நெல்லிமரங்களை வைத்து வளர்ப்பது அந்நாளில் அறச்செயல் கருதுவோர் மரபுகளிலே ஒன்றாயிற்று. இவ்விடத்து, இவளின்பால் நேர்கின்ற தோள் மெலிவை, அவ்விடத்தே இருந்துகொண்டே போக்கும் சக்தி படைத்தவோர் மருந்தும் உண்டோ? என்றனள். அது என்றும் இலதாதல் பற்றியும், மருந்து அவன் அவளுடன் கூடியிருத்தலான ஒன்றேயாவது பற்றியும் என்க. -

பாடபேதங்கள்: துறை: பிரிவு உணர்த்திய தோழி 9, நீர் வணிகராகி. 11. வாய்வதாக, 12. அவையன்.

272. நெடுவேள் பரவும்! பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்

புற்த்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.

‘(இரவுக்குறியிடத்தே தன் காதலியைக் கூடி மகிழும் எண்ணமுடையவனாக வந்துள்ள தலைமகன் ஒரு பக்கமா யிருப்ப, அவன் கேட்குமாறு, தலைமகளுக்குத் தம் உறவினால் அன்னை கொண்ட ஐயத்தையும், அதன் பயனாகச் செய்யும் செயல்களையும் சொல்லுபவள் போலத் தோழி சொல்லுகிறாள்.

இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப் புலவுநாறு புகர்நுதல் கழுவக், கங்குல் அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு அஞ்சுவரு விடர்முகை ஆர்.இருள் அகற்றிய, மின்ஒளிர் எஃகம் செல்நெறி விளக்கத், 5 தனியன் வந்து, பனிஅலை முனியான், நீர்இழி மருங்கின் ஆர்.இடத்து அமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி அசையா நாற்றம் அசைவளி பகரத் w துறுகல் நண்ணிய கறிஇவர் படப்பைக் 10

குறிஇறைக் குரம்பைநம் மனைவயின் புகுதரும், மெய்ம்மலி உவகையன் அந்நிலை கண்டு,