பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
324
அகநானூறு - மணிமிடை பவளம்
 


என்று, இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. இரும்புலி - பெரியபுலி, 4. விடர்முகை மலைப்பிளப்பாகிய குகை. ஆர் இருள் - மிகுதியான இருள். 5. விளக்க - விளக்கஞ் செய்ய மின்னொளி குகையின் இருளை அகற்றுவதுபோல வேலின் ஒளி வழியின் இருளினை அகற்றி ஒளிதர என்க. 6. பனியலை - பனி அலைத்தலை அலைத்தல் - துன்புறுததல். 7. அமன்ற செறிந்துள்ள.10.துறுகல் - வட்டக்கல். கறி மிளகுக்கொடி குறி இறை குறுகிய இறைப்பு:13. முருகு - முருகன். 15. நெடுவேள் - முருகன். .

விளக்கம்: ‘முருகென நினைந்து அன்னை பரவும் என்ற தனால், தமக்குத் தீமை வருவதும் கூடுமெனக் குறிப்பால் உணர்த்தி, இரவுக்குறியின் இசையாமையினைச் சொல்லினாள். ‘பொன்னென வேங்கை மலர்ந்து’ என்றது. மணம் புணர்க்கும் காலத்தின வரவையும் உரைத்து, அவனை வரைந்துகொள்ளுஞ் செயலிலே ஈடுபடத் தூண்டியதாகும்.

மேற்கோள்: “தலைவனைச் செவிலி கண்டு முருகெனப் பரவிய செயலினைத் தோழிகொண்டு கூறினாள் என, இதனைக் ‘களவலராயினும், என்னுஞ் சூத்திர உரையிலே நச்சினார்க் கினியர் காட்டினர்.

273. பெண்கள் உலகம்!

பாடியவர்: ஒளவையார். திணை: பாலை. துறை: பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.

(தலைவன் பிரிந்து வேற்றுார் சென்றுள்ளான். தலைவியின் உள்ளத்தே தனிமைத் துயரம் மிகுதியாயிற்று. அதனால், அவளுடைய அறிவும் மயக்கமுற்றது. அவள், தன் தோழியினிடம் இப்படித் தன் நிலைமையை எடுத்துச் சொல்லுகிறாள்.)

         விசும்பு விசைத்துஎறிந்த கூதளங் கோதையிற்.
         பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ,
         ஆர்கலி வளவயின் போதொடு பரப்பப்,
         புலம்புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்,
         நலம்கவர் பசலை நலியவும், நந்துயர் 5

         அறியார் கொல்லோ தாமே? அறியினும்,
         நம்மனத்து அன்ன மென்மை இன்மையின்,
         நம்முடைய உலகம் உள்ளார் கொல்லோ?
         யாங்கென உணர்கோ, யானே? - வீங்குபு
         தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு 10