பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


 உரையும் புலியூர்க்கேசிகன் 19

இறும்புபட்டு இருளிய இட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக், 1 O கான நாடன் வரூஉம், யானைக்

கயிற்றுப்புறத் தன்ன, கன்மிசைச் சிறுநெறி, மாரி வானந் தலைஇ நீர்வார்பு, இட்டருங் கண்ண படுகுழி இயவின், இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர் தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? 15

ஊரம்பலங்கள் ஒலியவிந்தவாய் மனைகளும் உறங்கின;

கொன்றால் ஒத்த கொடுமையோடு இன்று நடுயாமப் பொழுதும் வருமாயின், காமமானது செறிந்து கடலினுங் காட்டிற் பரந்து, பின்னர்க் கரைந்து ஒழியும்;

நாம் இவ்வண்ணமாயிருப்பவும், நம் நல்ல நெஞ்சமானது மயங்கி, என்னோடும் நின்னோடும் ஆராயாது, கைகடந்து:

சிறுகாடிட்டு இருண்ட குறுகலான கடத்தற்கரிய பக்க மலையினிடத்துள்ள, குறுமையினையுடைய சுனையிடத்தே பூத்த குவளை மலரை, வண்டு மொய்க்கும்படி சூடியவனாகக் காணநாடன் வாராநின்ற, யானை முதுகிற்கிடந்த கயிற்றுத் தழும்பு போன்ற கன்மிசையேயுள்ள சிறிதான வழியிலே,

மாரிக்காலத்து மேகம் மழைபெய்து நீங்கக், கூதிரிலே நீர் ஒழுகிச் செல்லுவதற்கு அரிதாயிருக்கும் குறுகிய இடத்தேயுள்ள படுகுழிகளையுடைய வழியிலே,

இருளினிடையே அவர் மிதிக்குந்தோறும் பார்த்து, அவரது தளரா நின்ற அடியைத் தாங்கியுதவும் பொருட்டாக, இன்று அவ்விடம் சென்றதே!

அஃது என்ன பயனைக் கருதியோ? தோழி அதனைச் சொல்வாயாக, நீ வாழ்க! .

என்று.இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொன்னாள் என்று கொள்க.

மன்று பாடவிந்து மனைமறந்தன்று; காமம் கரைபொழியும்;

நாம் இன்னமாகவும், நெஞ்சம் கான நாடன் வரூஉம் சிறி -

நெறிக்கட் படுகுழியியவின், அவர் இருளிடை மிதிப்புழி நோக்கித் தளரடி தாங்கி இன்று சென்றது, இஃது என்னையோ! என்க.