பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/343

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


328 அகநானூறு - மணிமிடை பவளம்

275. கண்ணுள்ளவரே பாருங்கள்!

பாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: மகட்போக்கிய தாய் சொல்லியது: மகட்போக்கிய செவிலி சொல்லியது எனவும் பாடம்.

(தன் மகள், தன்னுடைய உளம் நிறைந்தானாகிய காதலுனுடனே உடன்போக்கிலே சென்றுவிட, அதனால் உள்ளம் வருந்தியவளான தாய், தன் மகள் விளையாடிய இடத்தையும் பிறவற்றையும் காட்டி நொந்து புலம்புகின்றாள்.)

ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்திக், குடைஅடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலைப், பந்து எறிந்து ஆடி, இளமைத் தகைமையை வளமனைக் கிழத்தி! ‘பிதிர்வை நீரை வெண்நீறு ஆக, என, 5

யாம்தற் கழறுங் காலைத், தான்தன் மழலை இன்சொல, கழறல் இன்றி, இன்உயிர் கலப்பக் கூறி, நன்னுதல் பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்குஇவன் இராஅள், ஏதி லாளன் காதல் நம்பித் 1 O

திரளரை இருப்பதைத் தொள்ளை வான்பூக் குருளை எண்கின் இருங்கிளை கவரும் வெம்மலை அருஞ்சுரம், நம்இவண் ஒழிய, இருநிலன் உயிர்க்கும் இன்னாக் கானம், நெருநைப் போகிய பெருமடத் தகுவி 15

ஐதுஅகல் அல்குல் தழையணிக் கூட்டும் கூழை நொச்சிக் கீழது, என்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலும் காண்டீரோ, கண்உடை யீரே?

“வளமுடைய இல்லத்திற்கு உரியவளே! உயர்ந்த நிலையின தாகிய தாழியிலே நிறையக் கொண்ர்ந்து நிரப்பிப், பின் பனங்குடையால் முகந்த நீரினைச் சொரிந்தவளாக, நீயே பேணி வளர்த்த, பந்தரிட்டுப் படர்ந்துள்ள வயலைக்கொடிப் பந்தரினை உடைய இடத்திலே, பந்து எறிந்து விளையாடுவாய். இளமைத் தகைமை உடையவளே! இப்படித் திரியும் தன்மையான இருக்கின்றாயே! நின் பெண்மை நலன் அழிந்து போக” என்று, யாம் அவளைக் கடிந்துகொண்டோம். அப்போது,