பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


330 அகநானூறு - மணிமிடை பவளம்

மேற்கோள்: “வண்டலைக் காணார் தேஎத்து நின்று, காணல் ஆற்றீர்” எனக் கூறினதனால், ஆயத்திற்கு அன்றிப் புறஞ்சென்று சேரியோர்க்கு உரைத்ததாயிற்று” என, ‘ஏமப் பேரூர் என்னுஞ் சூத்திர உரையிலே, இச்செய்யுளின், வெம் மலை. கண்ணுடையீரே என்ற பகுதியை நச்சினார்க்கினியர் காட்டுவர்.

பாடபேதங்கள்: 4. வளமனை கழிப்பி. 7. கழறலையின்றி. 12. எண்கின் இருங்கிளை 12. வெம்னை அருஞ்சுரம்.

276. ஈயாதான் பொருள்!

பாடியவர்: பரணர். திணை: மருதம். துறை: தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. சிறப்பு: ஆரியர், பழக்கிய பிடியானைகளைக் கொண்டு காட்டின் புதிய களிறுகளை அகப்படுத்தல் முதலிய செய்திகள்.

(தலைமகனிடம் தான் உறவு கொண்டிருப்பதாகத் தலைமகள் பழித்தாள் எனக் கேட்டதும், பரத்தையின் உள்ளம் துடிக்கிறது. இனி, நமக்கு நாணமும் உண்டோ எனக் குமுறுகிறாள். தலைமகளின் தோழியர் கேட்குமாறு இப்படித் தன் தோழியரிடம் சொல்பவள்போலச் சொல்லுகின்றாள்.)

நீளிரும் பொய்கை இரைவேட்டு எழுந்த வாளை வெண்போத்து உணிஇய, நாரைதன் அடிஅறி. வுறுதல் அஞ்சிப், பைப்பயக் கடிஇலம் புகஉம் கள்வன் போலச், - சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு 5 ஆவதுஆக இனிநாண் உண்டோ? வருகதில் அம்ம, எம் சேரி சேர! அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத், தாரும் தானையும் பற்றி, ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் 10 தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்து, அவன் மார்புகடி கொள்ளேன் ஆயின், ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாத ஈட்டியோன் பொருள்போல், பரந்து வெளிப்படாது ஆகி, - : வருந்துக தில்ல, யாய் ஒம்பிய நலனே! 15

நெடிதான பெரிய பொய்கையிலே இரையை விரும்பியதாக எழுந்த வாளைமீனின் வெண்மையான ஆணினை உண்ணும் பொருட்டு, நாரையானது, தன் அடியின் நடக்கும் ஒலியை அது

,