பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/358

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 343

தோழி! பெரிய மலைச்சாரல்களிலே வேட்டையாடுவதற்கு மூட்டுவாய் செறிந்த அம்பினைத் தொடுத்த வலிய வில்லினை ஏந்தியவனாக, ஒரு வேட்டுவன் ஒரு நாட் சென்றான். அந்த அம்பினாலே பொருது கொன்ற யானையின் வெண்மையான கொம்புகளை எடுத்துக்கொண்டு சென்று, நீர் விளங்கும் அந்த மலைச்சாரலிலே கிடைக்கும் சிறந்த பொன்னை அகழ்ந்து எடுப்பவனானான். அப்பொழுது, கண்களைப் பொருதுவது போல ஒளிவீசுந் திரண்ட மணிகள் கிளைக்கப்பட்ட பொன்னுடனே சேர்ந்து மேலே வந்து தோன்றின. அதே சமயத்திலே கூரிய முனையையுடைய அவ்வெண்மையான யானைக் கொம்பும் ஒடியவே, தெளிந்த நீர்மையையுடைய ஆலங்கட்டி போன்ற முத்துக்கள் அதனின்றும் உதிர்ந்தன, வெவ்வேறாகிய, பொன், முத்து, மணி ஆகிய அந்தப் பொருள்களை ஒருங்கே சேரக்கட்டிச் சந்தன மரக்கொம்பினைக் காவு மரமாகக் கொண்டவனாகத் தோளிலே தூக்கிச் சுமந்து வருபவன், நறைக் கொடியாகிய நாரினாலே, வேங்கையின் மலரைத் தொடுத்து அணிந்து கொண்ட கண்ணியினை உடையவனாகவும் இறங்கி வருவான். அத்தகைய வளமுடைய மலைநாட்டை உடையவன் நம் காதலன்.

இனிய சுவையுள்ள பலாவினது, அழகுமிக்க செல்வச் செழுமையினை உடைய, நம் தந்தையும் அவனுக்கு நின்னைக் கொடுப்பதற்கு இசைந்தனன். அலர் கூறும் வாயினரான, பழி கூறும் ஊர்ப்பெண்டிரும், நின்னை அவனோடு சேர்த்தே இணைத்துச் சொல்வாராயினர். நம் தாயும், வளைந்த சந்தினையுடைய நின் தோள்களைப் பாராட்டி, அவனே நினக்கு உரிய மணவாளன் என்றனள். நாமும், “அவர்கள் மணத்திற்கு வரைந்த நாள் விரைவாக வருவதாக” என்று, நல்ல இறையினையுடைய நம் மெல்லிய விரல்களைக் குவித்து, நம்

மனையுறையும் தெய்வத்திற்குப் பலிக்கடன் செலுத்துவோமாக.

என்று, இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. வேட்டம் - வேட்டை 2. செறிமடை அம்பு மூட்டுவாய் செறிவுடையதான அம்பு. 3. தொலை - கொன்ற 4. நீர் - நீர்வளம். 5. திண் மணி - திரண்ட மணிகள், 8. தாரம் - பொருள். 9. பொறை மரம் - காவு மரம், சுமை பொறுத்தலால் பொறை மரமாயிற்று. நறை நறைக்கொடி 1, ஏர் செழு அழகு கெழுமிய செல்வம் அழகு செழுமிய தாவது, செல்வப்பயனான அறச்செயல்களைச் செய்து புகழ் பெறுதலால், 13 ஊர் ஊர்ப்